கடந்த 2012ம் ஆண்டில், 12ம் வகுப்பு தேறியவர்கள், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் என்னென்ன? | Kalvimalar - News

கடந்த 2012ம் ஆண்டில், 12ம் வகுப்பு தேறியவர்கள், ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு எழுதுவதற்கான தகுதிகள் என்னென்ன?மே 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

2012ம் ஆண்டில் 12ம் வகுப்பு தேர்வை முடித்தவர்கள், ஐஐடி.,கள் அல்லது ஐ.எஸ்.எம்.,தன்பாத் ஆகியவற்றில் சேர வேண்டுமெனில், அவர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினருக்கு 55% போதுமானது.

இந்த 2013ம் ஆண்டில் முதன்முதலாக 12ம் வகுப்பு வாரியத் தேர்வில் பங்கேற்பவர்களின் தகுதியானது, வெற்றிபெறும் மாணவர்களின் முதல் 20 பெர்சன்டைல் மதிப்பெண்களை, பிரிவு வாரியாக, அவர்களின் வாரியத் தேர்வுகளில் பெறுவதில் அடங்கியுள்ளது. 2013ல் நடைபெறும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுக்கான, ஒருதடவை சலுகை மட்டுமே இது.

அதேசமயம், கடந்த 2012ம் ஆண்டில் 12ம் வகுப்பு வாரியத்தேர்வை எழுதி, 2013ம் ஆண்டில், இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுத காத்திருப்போருக்கும், அவர்கள், தாங்கள் 2012ம் ஆண்டு பெற்ற மதிப்பெண்ணை சமர்ப்பிக்கையில் குறைந்தபட்ச 60% மதிப்பெண் விதிமுறை அதற்கு பொருந்தும். அதேசமயம், தங்களின் 2013 வாரியத் தேர்வு மதிப்பெண்களை சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு முதல் 20 பெர்சண்டைல் மதிப்பெண் விதிமுறை பொருந்தும். இத்தகைய விதிமுறைகளும் கூட, இந்த 2013ம் ஆண்டிற்கு மட்டுமேயான ஒரு சலுகையாகும்.

இந்த விதிமுறைகள் குறித்த விரிவான விபரங்களுக்கு www.jeemain-edu.in, jeeadv.iitd.ac.in என்ற வலைதளங்களில் செல்லவும்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us