என் பெயர் முரளி. நான் இறுதியாண்டு எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிக்கிறேன். இப்போதைய நிலையில், எனக்கு என்னமாதிரியான பணிகள் கிடைக்கும்? | Kalvimalar - News

என் பெயர் முரளி. நான் இறுதியாண்டு எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிக்கிறேன். இப்போதைய நிலையில், எனக்கு என்னமாதிரியான பணிகள் கிடைக்கும்?ஏப்ரல் 23,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களின் துறை எப்போதும் நல்ல வேலை வாய்ப்புகளைக் கொண்டது. பெல் மற்றும் சியமன்ஸ் போன்ற நிறுவனங்கள், இத்துறை பொறியாளர்களை பணிக்கு அமர்த்துகின்றன. அதேசமயம், இதுபோன்ற பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேர, அந்நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெறுவதும் அவசியம். மேலும், நீங்கள் படிக்கும் கல்லூரியின் தரம் மற்றும் படிப்பில் உங்களின் செயல்பாடு போன்றவையும் முக்கியம்.

எனவே, வெர்பல் ரீசனிங், அனலிடிகல் ரீசனிங், புதிர் போட்டித்திறன் போன்ற அம்சங்களை, மிகத் தெளிவாக கற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உங்கள் துறையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன. அதன் நிலை எப்படி இருக்கிறது என்பதைக் கற்றுக்கொள்வதோடு, நாட்டு நடப்புகளைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us