மத்திய சைக்யாட்ரி கல்வி நிறுவனம் | Kalvimalar - News

மத்திய சைக்யாட்ரி கல்வி நிறுவனம்ஜூலை 05,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

மத்திய சைக்யாட்ரி கல்வி நிறுவனம், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ளது. நாட்டில், மனநல சிகிச்சைக்கென இருக்கும் சிறந்த மையமாக இது திகழ்கிறது.

மருத்துவமனை வளாகம்

இம்மருத்துவமனை 210 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மொத்தம் 16 வார்டுகள் உள்ளன. மொத்தம் 643 படுக்கைகள் உள்ளன. பசுமை நிறைந்த சூழலில் இந்த மருத்துவமனை வளாகம் அமைந்துள்ளது.

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள்

மனநல மருத்துவ நிபுணர்களுக்கு, இந்தியாவிலுள்ள, ஒரு பிரதான பயிற்சி மையமாக இந்த சைக்யாட்ரி கல்வி நிறுவனம் திகழ்கிறது. அப்போதிருந்த மனநோய்க்கான மருத்துவமனை, இங்கிலாந்தின் D.P.M., படிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டது. அப்போது, சைக்யாட்ரி துறையில், முதுநிலைப் படிப்புகள், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.

1962ம் ஆண்டு, D.P.M., D.M., S.P., போன்ற படிப்புகளோடு, இக்கல்வி நிறுவனத்தில், முதுநிலைப்பட்ட பயிற்சி மையம் இணைக்கப்பட்டது. பிற படிப்புகள், அடுத்தடுத்த காலகட்டங்களில் இணைக்கப்பட்டன.

தற்போதைக்கு வழங்கப்படும் படிப்புகள்

* M.D. (Psychiatry)  - 6 seats
* Diploma in Psychological Medicine - 12 seats
* Ph.D in Clinical psychology - 4 seats
* M.Phil in Medical & Social psychology - 12 seats
* M.Phil in Psychiatric social work - 8 seats
* Diploma in Psychiatric Nursing - 12 seats

இக்கல்வி நிறுவனம், ராஞ்சி பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள், பிரபல செய்தித்தாள்களில் வெளியிடப்படுகின்றன. தேர்வுக் கமிட்டியால், மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இக்கல்வி நிறுவனம் பற்றிய விரிவான தகவல்களை அறிய http://cipranchi.nic.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us