எனது பெயர் அழகர்சாமி. பி.காம்., படிப்பை முடித்த நான், தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அடுத்த நிலைக்கு முன்னேற, பைனான்ஸ் துறையில் எம்.எஸ்., படிப்பை மேற்கொள்ள நினைக்கிறேன். இப்படிப்பை, தொலைநிலைக் கல்வி முறையில் மேற்கொண்டால், அது, நேரடியாக படித்த படிப்பிற்கு சமமாக மதிக்கப்படுமா? | Kalvimalar - News

எனது பெயர் அழகர்சாமி. பி.காம்., படிப்பை முடித்த நான், தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அடுத்த நிலைக்கு முன்னேற, பைனான்ஸ் துறையில் எம்.எஸ்., படிப்பை மேற்கொள்ள நினைக்கிறேன். இப்படிப்பை, தொலைநிலைக் கல்வி முறையில் மேற்கொண்டால், அது, நேரடியாக படித்த படிப்பிற்கு சமமாக மதிக்கப்படுமா?ஏப்ரல் 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

தொலைநிலைக் கல்விக்கென்று, உலகளவில், எந்தவித நிலையான மதிப்பீடும் கிடையாது. யு.ஜி.சி., அமைப்பும், தொலைநிலைக் கல்வி கவுன்சிலும் அங்கீகரித்த, தொலைநிலைப் படிப்பைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தொலைநிலைக் கல்வித் தகுதியை வைத்து, நீங்கள் வேலை தேடினால், உங்களுடைய பணி அனுபவத்திற்கு, அப்படிப்பு ஒப்பிட்டு பார்க்கப்படும்.

எம்.எஸ்., பைனான்ஸ் படிப்பை, தொலைநிலையில் படித்துவிட்டு, அதுதொடர்பான பணி அனுபவம் உங்களுக்கு இல்லையெனில், அப்படிப்பானது, உங்களுக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் பயன்படாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us