எனது பெயர் அன்புக்கரசி. எம்.பி.ஏ.,(டிராவல்) மற்றும் எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம்) ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன? அவற்றில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் கூறவும். | Kalvimalar - News

எனது பெயர் அன்புக்கரசி. எம்.பி.ஏ.,(டிராவல்) மற்றும் எம்.பி.ஏ.,(ஹாஸ்பிடாலிடி மற்றும் டூரிசம்) ஆகிய படிப்புகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன? அவற்றில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகள் பற்றியும் கூறவும்.ஏப்ரல் 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

டிராவல் எம்.பி.ஏ., படிப்பானது, நல்ல வாய்ப்பினைக் கொண்டிருந்தாலும், டூரிசம் மற்றும் ஹாஸ்பிடாலிடி சேவைகளைத் தவிர, அவற்றில் பன்முக வாய்ப்புகள் குறைவு. நீங்கள் மேலே கூறிய இரண்டு படிப்புகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

இப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, மேலாண்மை கல்வி நிறுவனங்கள், தங்களுக்கான சொந்த நுழைவுத்தேர்வுகளை நடத்தும் அல்லது சி.ஏ.டி/எம்.ஏ.டி தேர்வுகளை சார்ந்திருக்கும்.

டிராவல் மேனேஜ்மென்ட் மற்றும் சுற்றுலாவுக்கான இந்திய கல்வி நிறுவனம், லக்னோ, புதுச்சேரி, கேரளா மற்றும் இமாச்சல் பிரதேச பல்கலைக்கழகங்கள் ஆகியவை, சுற்றுலாத் துறையில் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை வழங்குகின்றன. ஹைதராபாத்திலுள்ள, சுற்றுலா மற்றும் ஹாஸ்பிடாலிடி மேலாண்மைக்கான தேசிய கல்வி நிறுவனம், ஹாஸ்பிடாலிடி துறையில் எம்.பி.ஏ., படிப்பை வழங்குகிறது.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us