எனது பெயர் சுடலைமுத்து. நான் பி.இ., படிப்பை அடுத்த 2014ம் ஆண்டு நிறைவு செய்வேன். டெலிகாம் மேனேஜ்மென்ட் துறையில் முதுநிலைப் படிப்பை வழங்கும் அமெரிக்கப் பல்கலைகளைப் பற்றி குறிப்பிடவும். அங்கே படிக்க, ஜிமேட் அல்லது ஜி.ஆர்.இ., ஆகிய தேர்வுகளை எழுத வேண்டுமா? | Kalvimalar - News

எனது பெயர் சுடலைமுத்து. நான் பி.இ., படிப்பை அடுத்த 2014ம் ஆண்டு நிறைவு செய்வேன். டெலிகாம் மேனேஜ்மென்ட் துறையில் முதுநிலைப் படிப்பை வழங்கும் அமெரிக்கப் பல்கலைகளைப் பற்றி குறிப்பிடவும். அங்கே படிக்க, ஜிமேட் அல்லது ஜி.ஆர்.இ., ஆகிய தேர்வுகளை எழுத வேண்டுமா?ஏப்ரல் 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் கேட்ட படிப்பை அமெரிக்காவில் படிக்க, மேற்கூறிய தேர்வுகளில் ஒன்றை, கட்டாயம் எழுத வேண்டும். ஆனாலும், ஜி.ஆர்.இ., தேர்வில் இரண்டில் சிறந்தது. ஏனெனில், இதன்மூலம், நெட்வொர்க்கிங் அல்லது வயர்லெஸ் போஸ்ட்கிரேட் படிப்புகளில் சேரும் தகுதிகளையும் வழங்குகிறது.

டெலிகாம் மேனேஜ்மென்ட் படிப்புகளை வழங்கும் சில புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைகள், தெற்கு கலிபோர்னிய பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டனிலுள்ள வடகிழக்கு பல்கலைக்கழகம் போன்றவை.

மேலும், அரிசோனா மாநில பல்கலை, மின்னசோட்டா பல்கலை, பாஸ்டன் பல்கலை, பிட்ஸ்பர்க் பல்கலை, ஓக்லஹோமா பல்கலை, மேரிலேண்ட் பல்கலை மற்றும் கொலராடோ பல்கலை போன்ற பகலைகளிலும், இப்படிப்பின் பொருட்டு நாம்விசாரணை மேற்கொள்ளலாம்.

பல்வேறு செமஸ்டர்களில் நீங்கள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் ஜி.ஆர்.இ மற்றும் டோபல் தேர்வு மதிப்பெண்கள் ஆகியவையும் கணக்கில் எடுக்கப்படும்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us