என் பெயர் சித்தார்த்தன். நான் எனது எம்.எஸ்சி.,(ஜெனடிக்ஸ்) படிப்பை, வரும் 2014ம் ஆண்டில் நிறைவுசெய்வேன். எனது தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள, பயோடெக் துறையில் எம்.பி.ஏ., படிக்க வேண்டுமா? | Kalvimalar - News

என் பெயர் சித்தார்த்தன். நான் எனது எம்.எஸ்சி.,(ஜெனடிக்ஸ்) படிப்பை, வரும் 2014ம் ஆண்டில் நிறைவுசெய்வேன். எனது தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள, பயோடெக் துறையில் எம்.பி.ஏ., படிக்க வேண்டுமா?ஏப்ரல் 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் புகழ்பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ., படித்தால், சிறந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணி வாய்ப்புகளை பெறலாம். நீங்கள் படிக்கும் எம்.எஸ்சி., ஜெனடிக்ஸ் துறை பல்வேறான பணி வாய்ப்புகளை தன்னகத்தேக் கொண்டுள்ளது. இப்படிப்பின் மூலமாக, ஜெனடிக் குறைபாட்டு நோய்களைப் பற்றிய அறிவு நமக்கு கிடைக்கிறது. இதனால், ஜெனடிக் குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்புள்ள பெற்றோருக்கான ஆலோசனைகளையும் வழங்க முடிகிறது.

வேளாண்மைத் துறையைப் பொறுத்தவரை, புதிய முயற்சிகளை மேற்கொள்ள, ஜெனடிக் ஆராய்ச்சித்துறை பேருதவியாக இருக்கிறது. பயோடெக்னாலஜி துறையிலும், ஜெனடிக்ஸ் தொழில்நுட்பம், அதிகளவில் பயன்படுகிறது. ஆனால், தற்போதைய நிலையில், தனியார் துறையில், ஜெனடிக்ஸ் படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் இல்லை. எனவே, எம்.பி.ஏ., அல்லது எம்.பி.ஏ.,(பயோடெக்) படித்தால், நிறைய வாய்ப்புகளைப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us