எனது பெயர் எல்லாளன். எம்.பி.ஏ., படிப்பிற்கும், எம்.எம்.எஸ்., படிப்பிற்குமான வித்தியாசம் என்ன? மேலும், சி.ஏ.டி தேர்வைப் பற்றியும் விளக்கம் தரவும். | Kalvimalar - News

எனது பெயர் எல்லாளன். எம்.பி.ஏ., படிப்பிற்கும், எம்.எம்.எஸ்., படிப்பிற்குமான வித்தியாசம் என்ன? மேலும், சி.ஏ.டி தேர்வைப் பற்றியும் விளக்கம் தரவும்.ஏப்ரல் 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்த 2 படிப்புகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில்தான், வித்தியாசம் உள்ளது. இந்த இரண்டு படிப்புகளிலும் சேர, குறைந்தபட்சம் ஏதேனுமொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பள்ளி மேல்படிப்பு வரை முறையாக 12 வருடங்கள் படித்து, 3 வருட பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சி.ஏ.டி., எக்ஸ்.ஏ.டி., போன்ற பல்வகை நுழைவுத்தேர்வுகள், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள், இப்படிப்புகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும், படிப்பில் ஒருவரின் சாதனைகள், பன்முகத் திறமை தொடர்பான நடவடிக்கைகளில் செயல்பாடு, இன்னபிற சாதனைகள் மற்றும் படிப்பிற்கு பிறகான பணி அனுபவம் ஆகியவற்றுக்கும் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர்வதை உறுதிசெய்ய வேண்டும். மேலும், நீங்கள் சேரும் வணிகப் பள்ளிகளில், எதுபோன்ற பெரிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு வருகின்றன என்பதை நன்றாக விசாரித்து அறிந்துகொள்ளவும்.

சி.ஏ.டி., தேர்வைப் பொறுத்தவரை, அது இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களால்(ஐ.ஐ.எம்.,) நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும் அதற்கான அறிவிப்பு, நாடு முழுவதும், ஜுலை மாதத்தில் வெளியாகும். எழுத்துத்தேர்வு, வழக்கம்போல் நவம்பர் மாதம் நடைபெறும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us