பல சிறந்த பயோடெக்னாலஜி கல்லூரிகள், அரசால் நடத்தப்படுபவையே. இவற்றில் பல கல்லூரிகள், முதுநிலை அளவிலேயே மாணவர்களை சேர்க்கின்றன. இப்படிப்பில் மாணவர்களை சேர்க்க, தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இளநிலை அளவில், தாவரவியல் அல்லது விலங்கியல் எடுத்துப் படித்து, துணைப்பாடமாக, வேதியியல் அல்லது கணிதத்தை மேற்கொள்ள வேண்டும். இவற்றை நல்ல கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்பது முக்கியம். இத்தகைய படிப்புகளில் உங்களுக்கிருக்கும் சிறப்பான அடிப்படை அறிவானது, உங்களின் பயோடெக்னாலஜி படிப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும், இளநிலை இரண்டாமாண்டு படிக்கும்போதே, கம்ப்யூட்டிங் தொடர்பாக உங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவும். ஒரு டேட்டாபேஸ் தொழில்நுட்பம் மற்றும் ஒரு ப்ரோகிராமிங் லாங்குவேஜ் ஆகியவற்றில் ஸ்பெஷலைஸ் செய்து கொள்ளவும். பொதுவாக, விஞ்ஞானிகள், இளநிலை அளவில் பயோடெக்னாலஜி ஸ்பெஷலைசேஷன் படிப்பை பரிந்துரைப்பதில்லை. அடிப்படை அறிவியல் துறையில் போதுமான அறிவைப் பெற்ற பிறகே, இத்துறையில் நுழைய பரிந்துரைக்கிறார்கள்.