என் பெயர் வனநேசன். காட்டு வாழ்க்கை அல்லது சுற்றுச்சூழல் படிப்பில் டிகிரி அல்லது சான்றிதழ் வழங்கும் கல்வி நிறுவனம், உலகில் எங்கு உள்ளது? | Kalvimalar - News

என் பெயர் வனநேசன். காட்டு வாழ்க்கை அல்லது சுற்றுச்சூழல் படிப்பில் டிகிரி அல்லது சான்றிதழ் வழங்கும் கல்வி நிறுவனம், உலகில் எங்கு உள்ளது?பிப்ரவரி 14,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் சொன்ன இரண்டு படிப்புகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றாலும், தனித்தனி துறைகள். காட்டு வாழ்க்கை(wild life) சம்பந்தமான படிப்பானது, விலங்குகளை பாதுகாப்பது தொடர்பானது. ஆனால், சுற்றுச்சூழல் படிப்பானது, தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் ஆகியோரை உள்ளடக்கியது.

உங்களுக்கு wild life படிப்பில் ஆர்வம் என்றால், டெஹ்ராடூனிலுள்ள, இந்திய காட்டு வாழ்க்கை கல்வி நிறுவனத்தில்(www.wii.gov.in) வழங்கப்படும் M.Sc., (Wild life) படிப்பே சிறந்தது. ஆனால், இப்படிப்பில் வெறும் 14 இடங்களே உள்ளன என்பதையும், போட்டி எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

சுற்றுச்சூழல் அறிவியல் படிப்பை பொறுத்தவரை, நிலைமை வேறு. இத்துறையில் படிப்புகளை மேற்கொள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலை, மும்பை பல்கலை, புனே பல்கலை மற்றும் சென்னைப் பல்கலை போன்றவை சிறந்த இடங்கள். இப்படிப்புகளில், சுற்றுச்சூழல் அறிவியலில் உங்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, மாசுபாடு மற்றும் அவற்றை குறைக்கும் வியூகங்கள் குறித்து கற்பிக்கப்படும்.

அதேசமயம், சுற்றுச்சூழல் கொள்கையில் உங்களுக்கு ஆர்வமிருந்தால், TERI போன்ற பல்கலைகள் உங்களுக்கு படிக்க ஏற்றவை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us