இயற்பியல் கல்வி நிறுவனம் - ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனம் | Kalvimalar - News

இயற்பியல் கல்வி நிறுவனம் - ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனம்மார்ச் 05,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒடிசா தலைநகர் புபனேஷ்வரிலுள்ள இயற்பியல் கல்வி நிறுவனம், ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகும். அணு ஆற்றல் துறை மற்றும் ஒடிசா மாநில அரசு ஆகிய இரண்டும் இணைந்து இதற்கு நிதியளிக்கின்றன. இக்கல்வி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1972ம் ஆண்டு நிறுவப்பட்டது.

இக்கல்வி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரங்கள், கவர்னிங் கவுன்சிலிடம் உள்ளன.

ஆராய்ச்சித் துறைகள்

HIGH ENERGY THEORY
CONDENSED MATTER THEORY
NUCLEAR PHYSICS THEORY
EXPERIMENTAL CONDENSED MATTER PHYSICS
EXPERIMENTAL HIGH ENERGY PHYSICS

போன்ற துறைகளில், இந்நிறுவனம விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.

உள்கட்டமைப்பு

பலவகை வசதிகளையும் கொண்ட நூலகம், கணினி மையம் போன்றவை உள்ளன. மேலும், சிறப்பான மருத்துவ வசதியும், இந்த வளாகத்தில் உண்டு.

நிகழ்வுகள்

இக்கல்வி நிறுவனத்தில், பல்வேறான தலைப்புகளில் செமினார்கள், மாநாடுகள் மற்றும் இயற்பியல் பற்றிய வெளிப்படையான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

பணிவாய்ப்புகள்

இக்கல்வி நிறுவனத்தில், பல நிலைகளிலான பணி வாய்ப்புகளும் உள்ளன. அவைகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள http://www.iopb.res.in/job/viewjobs.php என்ற வலைதளம் செல்ல்க.

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள்

டாக்டோரல் படிப்பு

ஹோமி பாபா தேசிய கல்வி நிறுவனம் வழங்கும் பிஎச்.டி., பட்டத்தைப் பெறும் வகையிலான, டாக்டோரல் படிப்பு இங்கே வழங்கப்படுகிறது. இந்த ஆய்வை மேற்கொள்ள இயற்பியலில், குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பொது நுழைவுத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

மேலும், ஒரு வருட, Pre - Doctoral படிப்பையும் வெற்றிகரமாக நிறைவுசெய்ய வேண்டும். High Energy Physics, Condensed Matter Physics, Nuclear Physics போன்ற துறைகளில், விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சிப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு, முதல் ஆண்டில், மாதம் ரூ.16 ஆயிரமும், அதன்பிறகு, மாதம் ரூ.18 ஆயிரமும் உயர்த்தி வழங்கப்படுகிறது. புத்தகங்கள் வாங்க மற்றும் ஆராய்ச்சி தொடர்பான இதர செலவுகளுக்காக, ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இவைத்தவிர, ஆய்வு மாணவர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் பயனுள்ள கல்வி கலந்தாய்வுகளில் பங்கேற்குமாறு, ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆராய்ச்சி மாணவர்களுக்கு, தேவையான மருத்துவ வசதிகளும் கிடைக்கின்றன.

ப்ரீ-டாக்டோரல் படிப்பு

இந்தப் படிப்பானது, 3 செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு Semester -கள், 3 மாத காலஅளவைக் கொண்டது மற்றும் கடைசி Semester, 4 மாத காலஅளவைக் கொண்டது.

இப்படிப்பில், பல பாடங்கள் உண்டு. அனைத்து பாடங்களையும் படிப்பது, ஆய்வாளர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து தியரி படிப்புகளுக்குமான வகுப்பறை நேரம் 40 மணிநேரங்கள். அனைத்திற்கும் மொத்த மதிப்பெண்கள் 100.

மேலும், இக்கல்வி நிறுவனத்தில், அட்வான்ஸ்டு படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இக்கல்வி நிறுவனத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் விரிவாக அறிந்துகொள்ள http://www.iopb.res.in என்ற வலைத்தளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us