நீர் விளையாட்டுக்களுக்கான தேசிய கல்வி நிறுவனம் | Kalvimalar - News

நீர் விளையாட்டுக்களுக்கான தேசிய கல்வி நிறுவனம்ஏப்ரல் 29,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த 1990ம் ஆண்டு, ஒரு சுயாட்சி கல்வி நிறுவனமாக, இது கோவாவில் ஏற்படுத்தப்பட்டது. நாட்டில் நடைபெறும் அனைத்து நீர் விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கும், தலைமை நிறுவனமான இக்கல்வி நிறுவனம், அவ்விளையாட்டுகள் தொடர்பான மேம்பாட்டு முயற்சிகளையும் மேற்கொள்கிறது. பயிற்சிகள், ஆலோசனை, மேம்பாடு, விதிமுறைகள், பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்தல் போன்ற பல்வேறு பணிகளை செய்கிறது.

பயிற்சி நடவடிக்கையில், பாதுகாப்பே முக்கியம் என்ற தத்துவம் வலியுறுத்தப்படுகிறது. Handling, sailing, windsurfing, water skiing, river rafting and kayaking உள்பட, பல்வேறு துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

படிப்புகளும், அதற்கான கட்டணங்களும்

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள்,

* SKILL COURSES
* PROFESSIONAL COURSES
* MANAGEMENT COURSES

என்று 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றன. இவ்வகையில், மொத்தம் 25 படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தப் படிப்புகளின் காலகட்டம், குறைந்தது 2 முதல் 21 நாட்கள் வரையினதாகும்.

வெளிப்புற பயிற்சி

வெளிப்புற பயிற்சிகள் என்பவை, கோவாவுக்கு வெளியே வழங்கப்படுகின்றன. இத்தகைய பயிற்சிகளுக்கு, ஸ்பான்சர் செய்யும் குறிப்பிட்ட ஏஜென்சிகள், அடிப்படை கட்டுமான வசதிகள் மற்றும் பயிற்சி உபகரணங்களை வழங்குகின்றன.

தொழில்முறை படிப்புகள்

இந்நிறுவனம், தொழில்முறை படிப்புகளையும் வழங்குகிறது.

* Life saving techniques
* Surf lifesaving techniques for beach lifeguards
* Power boat handling
* Outboard motor maintenance

என்ற பிரிவுகளில், பலவிதமான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சேர்க்கைக்கு பதிவுசெய்தல்

முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அனுப்புவதன் மூலமாகவோ, மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அல்லது பேக்ஸ் மூலமாக பதிவுசெய்வதன் மூலமாகவோ, ஒருவர் தனக்கான இடத்தை உறுதிபடுத்தலாம். அதேசமயம், கட்டணத்தை முழுமையாக செலுத்துதல் மற்றும் இருக்கும் காலியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, ஒருவருக்கான இடம் உறுதி செய்யப்படும்.

சான்றிதழின் செல்லுபடி காலம்

பயிற்சி படிப்புகளுக்கு, இந்நிறுவனம் வழங்கும் லைசன்ஸ் மற்றும் சான்றிதழ் போன்றவை, 2 வருட மதிப்பு கொண்டவை. எனவே, குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன், சம்பந்தப்பட்டவர், மறுமதிப்பீடு செயல்பாட்டில் கலந்துகொள்ள வேண்டும். இவை, 1 அல்லது 2 நாட்கள் நடைபெறும். இதன்மூலம், ஒருவரின் லைசன்ஸ் புதுப்பிக்கப்படும். இந்த செயல்பாட்டிற்காக, ஒரு உரிமத்திற்கு ரூ.1500 வசூலிக்கப்படுகிறது.

இக்கல்வி நிறுவனம் வழங்கும் உரிமங்களுக்கு, இக்கல்வி நிறுவனமே முழு பொறுப்பு.  நீர் விளையாட்டின் பாதுகாப்பு நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக, சம்பந்தப்பட்ட உரிமங்களையும், சான்றிதழ்களையும் திரும்பப்பெறும் உரிமை, இக்கல்வி நிறுவனத்திற்கு உண்டு.

இக்கல்வி நிறுவனம், வேறுபல பயிற்சி திட்டப் படிப்புகளையும் வழங்குகிறது.

பணி வாய்ப்புகள்

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள், நீர் விளையாட்டு இயக்க செயல்பாடு, குள மேலாண்மை, Water-theme park செயல்பாடு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு முக்கியமானவை. எனவே, நன்கு பயிற்சிபெற்ற மற்றும் உரிமம் அளிக்கப்பட்ட நிபுணர்கள் இல்லாமல், நீர் விளையாட்டுக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் வாட்டர் பார்க் ஆகியவற்றை நடத்துதல் சட்டப்படி குற்றம்.

எனவே, அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்கள், மேற்கூறிய பயிற்சிபெற்ற நிபுணர்களை கட்டாயம் பணியில் வைத்துக்கொள்ள வேண்டும். கோவாவிலுள்ள நீர் விளையாட்டிற்கான தேசிய கல்வி நிறுவனம், இந்த துறையில் செயல்படக்கூடிய ஒரே கல்வி நிறுவனமாக இருப்பதால், இங்கே படித்துமுடித்து வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் நிறைந்துள்ளன.

இன்றைய உலகமய சூழலில், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறையவே உண்டு. அதுவும், நீர் விளையாட்டுகளுக்கு பஞ்சமே இல்லை. எனவே, இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இதற்கான பணி வாய்ப்புகள் அதிகம்.

பல முக்கிய நிறுவனங்கள், இத்துறை நிபுணர்களை பணிக்கு அமர்த்திக் கொள்கின்றன. அவற்றில் சில.

Essel World, Mumbai
Jaqbera Watersports, Goa
Fathima Adventures, Goa
Aquatic Watersports, Goa
Water Kingdom, Mumbai
Lavasa Hill Town, Pune
Sahara City, Lonavala, Maharashtra
Nature Trails & Resorts, Thane, Maharashtra
A.P Tourism Development Corporation
Bake Tourism Development Authority, Kannur
Hotel Leela Beach, Goa
Fort Aguada Beach Resort, Goa
Cidade de Goa, Goa

மற்றபடி, இந்நிறுவனம் பற்றிய அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள http://www.niws.nic.in/ என்ற வலைத்தளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us