மொரார்ஜ் தேசாய் தேசிய யோகா கல்வி நிறுவனம் | Kalvimalar - News

மொரார்ஜ் தேசாய் தேசிய யோகா கல்வி நிறுவனம்ஏப்ரல் 23,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் இயங்கும் ஒரு சுயாட்சி நிறுவனம்தான், மொரார்ஜ் தேசாய் தேசிய யோகா கல்வி நிறுவனம். யோகா கல்வி, பயிற்சி, தெரபி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை திட்டமிடல், பயிற்சியளித்தல், உயர்த்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை செய்யும் ஒரு மைய நிறுவனமாக இது திகழ்கிறது. இந்நிறுவனம் டெல்லியில் அமைந்துள்ளது.

கிளாசிக்கல் யோகா அடிப்படையில், யோக தத்துவம் மற்றும் பயிற்சி முறைகளைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வை உருவாக்குவதே இக்கல்வி நிறுவனத்தின் நோக்கம்.

மேலும், இதன் லட்சியம் என்னவெனில், யோகா மூலமாக, ஆரோக்கியம், நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை அடைவதாகும்.

சிறப்பு யோகா மையங்கள்

பெங்களூர், புதுச்சேரி, டெல்லி, ஜாம்நகர் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில், யோகாவிற்கான சிறப்பு மையங்களை ஏற்படுத்தி, யோகா மேம்பாட்டிற்கான சிறப்பு ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

துறைகள்

யோகா கல்வி, யோகா தெரவி மற்றும் பயிற்சி, யோகா ஆராய்ச்சி, தகவல்தொடர்பு மற்றும் ஆவணப்படுத்துதல் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகள் இங்குள்ளன.

யோகா கல்வி

* யோகா அறிவியலில் டிப்ளமோ படிப்பு
* யோகா அறிவியலில் சான்றிதழ் படிப்பு
* யோகாவில் தொடர்ச்சியான மருத்துவ கல்வி படிப்பு

போன்றவை இத்துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. விரிவான விபரங்களுக்கு: http://www.yogamdniy.nic.in/index2.asp?slid=2&sublinkid=2&langid=1

யோகா தெரபி மற்றும் பயிற்சி

* யோகா பயிற்சி படிப்புகள்
* யோகா தெரவி படிப்புகள்

போன்றவை இத்துறையில் இடம்பெறுகின்றன.

யோகா ஆராய்ச்சி

* அறிவியல் ஆராய்ச்சி
* பிலாசபிகோ இலக்கிய ஆராய்ச்சி
* யோகாவிற்கான நவீன மையங்கள்
* WHO அமைப்பின் திட்டம்

போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.

தகவல்தொடர்பு மற்றும் ஆவணப்படுத்துதல்

* வெளியீடு மற்றும் பரப்புதல்
* கற்றல் வள மையம்

போன்றவை அடங்கும்.

யோகா தொடர்பான ப்ரோகிராம்கள்

* கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட யோகா ப்ரோகிராம்கள்
* யோகா அறிவியலில் டிப்ளமோ
* யோகா பயிற்சி ப்ரோகிராம்கள்
* யோகா கல்வி
* ஸ்பெஷல் ப்ரோகிராம்
* அறிவியல் ஆராய்ச்சி
* வெளியீடு மற்றும் பரப்புதல்
* சர்வதேச நடவடிக்கைகள்
* ஆரோக்கிய மேம்பாட்டு ப்ரோகிராம்
* நீட்டிப்பு நடவடிக்கைகள்
* யோகாவிற்கான மேம்பாட்டு மையங்கள்

விரிவான விபரங்களுக்கு: http://www.yogamdniy.nic.in/index1.asp?linkid=22&langid=1

திட்டங்கள்

Swami Vivekananda District Yoga wellness centre
Scheme of Foundation course in Yoga Science for medical Graduates or Professionals
Yoga in school health

போன்றவை. விரிவான விபரங்களுக்கு http://www.yogamdniy.nic.in/index1.asp?linkid=42&langid=1

இந்நிறுவனத்திலுள்ள கற்பித்தல் துறைகள்

* யோகா கல்வித்துறை
* யோகா தெரப்பி துறை
* யோகா தத்துவத் துறை
* மனித உணர்வு நிலைத்துறை
* மனித உடலமைப்பியல் துறை
* மனித உடல் செயல்பாட்டியல் துறை
* துணை அறிவியல்கள் துறை

இவைத்தவிர, இங்குள்ள, மொழிகளுக்கான துறையில், சமஸ்கிருதம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

மேலும், யோகா அறிவியல் பிரிவில், பி.எஸ்சி., படிப்பும் வழங்கப்படுகிறது.

குறிப்பு

யோகா துறைக்கான இந்த மொரார்ஜி தேசாய் கல்வி நிறுவனமானது, யோகா தொடர்பான பல நிலைகளிலான படிப்புகள் மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது. எனவே, யோகா ஆர்வமுள்ளவர்களுக்கு, இந்நிறுவனம் ஒரு பெரிய வரப்பிரசாதமாக திகழ்கிறது. அவர்கள், தங்களின் வசதி மற்றும் விருப்பத்திற்கேற்ற படிப்புகளை, இந்நிறுவனத்தில், தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

இந்நிறுவனம் பற்றிய முழு விபரங்களுக்கு www.yogamdniy.nic.in என்ற வலைத்தளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us