மக்கள்தொகை அறிவியலுக்கான சர்வதேச கல்வி நிறுவனம் | Kalvimalar - News

மக்கள்தொகை அறிவியலுக்கான சர்வதேச கல்வி நிறுவனம்டிசம்பர் 04,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

மக்கள்தொகை தொடர்பான ஆய்வுகளில், பயிற்சி மற்றும் ஆராய்ச்சிகளில், ஒரு பிராந்திய கல்வி நிறுவனமாக இது செயல்படுகிறது. இந்நிறுவனம் கடந்த 1956ம் ஆண்டு மும்பையில் தோற்றுவிக்கப்பட்டது. மேலும், 1985ம் ஆண்டு, நிகர்நிலைப் பல்கலையாக இது அறிவிக்கப்பட்டது.

கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடல்லாமல், அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. கடந்த பல ஆண்டுகளில், மக்கள்தொகை மற்றும் சுகாதாரத் துறைகளில், ஏராளமான நிபுணர்களை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஆசியா, பசிபிக் பிராந்தியம், ஆப்ரிக்கா மற்றும் வடஅமெரிக்க பிராந்தியங்களில் உள்ள 42 நாடுகளை சேர்ந்த மாணவர்கள், இக்கல்வி நிறுவனத்தால் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர்.

இக்கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர்கள், உலகளவில், பல்வேறு நாடுகளில் அரசுகளில், மக்கள்தொகை மற்றும் சுகாதாரத் துறைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றில் முக்கிய பணிகளைப் பெற்றுள்ளனர்.

இந்நிறுவனத்தின் நோக்கம்

* இந்தியா மற்றும் பிற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு, டெமோகிராபி மற்றும் அதுதொடர்பான துறைகளில் பயிற்சியளித்தல்.

* இந்தியா மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில், மக்கள்தொகை தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்த அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.

* இந்திய மற்றும் பிற நாடுகளின் மக்கள்தொகைப் பற்றிய விபரங்களை சேகரிக்கிறது, ஒருங்கிணைக்கிறது மற்றும் பரப்புகிறது.

* படிப்புகள், மாநாடுகள், விரிவுரைகள், செமினார்கள் போன்ற நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், மேற்கொள்ளுதல் மற்றும் உதவுதல்.

* ஜர்னல்கள், ஆராய்ச்சி பேப்பர்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை வெளியிடும் பணிகளை மேற்கொள்ளுதல்.

உள்கட்டமைப்பு வசதிகள்

முக்கிய கட்டடம், கல்விக்கூட கட்டடம், நூலகம், கணினி மையம், விடுதி கட்டடம், விருந்தினர் இல்லம், துணை கட்டடம், இயக்குநர் இல்லம் மற்றும் தங்குமிட கட்டடங்கள் என்று பல பிரிவுகளாக, கட்டட அமைப்புகள் விரிந்துள்ளன. அந்தந்த கட்டடங்களில், தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகள்

* Master of Population studies(MPS)
* Master of Philosophy(M.Phil) in Population studies
* Master of Population studies(MPS) (distance learning)
* Diploma in Population studies(DPS) (distance learning)
* Doctor of Philosophy(Ph.D) in Population studies
* Diploma in Health promotion education(DHPE)
* Short term courses
* M.A/M.Sc., programme in Population studies

படிப்புகளைப் பற்றி மேலும் அறிய http://www.iipsindia.org/courses.htm என்ற வலைத்தளம் செல்க.

கட்டண விபரம்

கட்டண விபரங்களைப் பற்றிய விரிவாக அறிந்துகொள்ள http://www.iipsindia.org/courses09.htm என்ற வலைத்தளம் செல்க.

இக்கல்வி நிறுவனம் பற்றிய முழு விபரங்களுக்கு http://www.iipsindia.org/about.htm என்ற வலைத்தளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us