நான் உத்தமராஜன். சோசியாலஜி பாடத்தில் பி.எச்டி பட்டம் பெற்று, ஒரு பல்கலையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். பயாலஜிகல் சயின்ஸ் துறையில் ஏதேனுமொரு படிப்பை(குறிப்பாக ஹோமியோபதி) மேற்கொள்ள விரும்புகிறேன். அது வேலைவாய்ப்புக்காக அல்ல. பள்ளி மேல்நிலைப் படிப்பில் அறிவியல் படிக்காமல், இதுபோன்ற அறிவியல் படிப்புகளை மேற்கொள்ள முடியுமா?நவம்பர் 29,2012,00:00 IST
துரதிருஷ்டவசமாக, உங்களுக்கான வாய்ப்புகள் இல்லை. பள்ளிப் படிப்பில் அறிவியல் படிக்காமல், பட்டப் படிப்புகளில் அறிவியல் படிக்க முடியாது என்ற நிலையே உள்ளது. நமது கல்வித்திட்டம் இன்னும் பழங்கால விதிமுறைகளையே கொண்டுள்ளது. அதில், பல உருப்படியான மாற்றங்கள் தேவை.