பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பட்ட மேற்படிப்புகள், பி.எச்டி., இன்ஜினியரிங், மெடிகல், சட்டம், விவசாயம், மேனேஜ்மெண்ட் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற தொழிற்படிப்புகள், ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.ஏ., சி.எப்.ஏ., ஆகியவற்றுக்கு கல்விக் கடன் தரப்படுகிறது. மேலும் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., ஐ.ஐ. எஸ்சி., எக்ஸ். எல்.ஆர்.ஐ., என்.ஐ. எப்.டி. போன்ற நிறுவனங்கள் நடத்தும் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நடத்தும் படிப்புகள் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ./யு.ஜி.சி./ மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் படிப்புகளுக்கு வங்கிகளின் கல்விக்கடனைப் பெறலாம். இதுபோலவே வெளிநாடுகளில் படிக்கும் பட்டப் படிப்புகள்/பட்ட மேற்படிப்புகள்/எம்.சி.ஏ./ எம்.பி.ஏ., போன்ற படிப்புகளுக்கும் கல்விக் கடனைப் பெறலாம்.