தமிழ்நாட்டில் பகுதிநேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன? | Kalvimalar - News

தமிழ்நாட்டில் பகுதிநேர இன்ஜினியரிங் படிப்புகள் எங்கு தரப்படுகின்றன?நவம்பர் 17,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி டிப்ளமோ முடித்தவர்கள் பி.இ.,/பி.டெக்.,படிப்பைப் படிக்க உதவும் வகையில் பகுதி நேர இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்கல்வி இயக்ககம் நடத்துகிறது.

கோயம்பத்தூர், சேலம், திருநெல்வேலி, பர்கூர், வேலுõர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, கோயம்பத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பி.எஸ்.ஜி., காலேஜ் ஆப் டெக்னாலஜி ஆகிய 9 கல்லூரிகளில் இதைப் படிக்கலாம். எந்த ஆண்டு படிக்க விரும்புகிறோமோ அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us