ஆங்கில இலக்கியம் படித்து வரும் மாணவர்களுக்கான வாய்ப்புகள் என்ன? | Kalvimalar - News

ஆங்கில இலக்கியம் படித்து வரும் மாணவர்களுக்கான வாய்ப்புகள் என்ன?அக்டோபர் 25,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

தொன்றுதொட்டு பாரம்பரியமான மதிப்பை இழந்திடாமல் தக்க வைத்துக் கொண்டுள்ள படிப்புகளில் ஆங்கில இலக்கியமும் ஒன்று. வெளியிலிருந்து பார்த்தால் அன்னிய இலக்கியத்தோடு தொடர்புடைய படிப்பு போலத் தோன்றினாலும் ஆங்கில இலக்கியம் அருமையான படிப்புகளில் ஒன்று.

பதிப்பு, மொழிபெயர்ப்பு, இதழியல், எழுத்துப் பணிகள், அவுட்சோர்சிங், டிவி, ரேடியோ, திரைப்படம், திரைக்கதை, கன்டென்ட் புரவைடர்ஸ் என ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

இந்தப் படிப்பை முடித்திருப்பவருக்கான சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்வது, அதில் பெறும் புலமைதான். விளம்பரம், வாடிக்கையாளர் சேவை என எத்தனையோ வாய்ப்புகளையும் கூட பெறலாம். பி.பி.ஓ., துறையில் ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு தனியிடம் உண்டு.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us