அமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்1, ஜே1 விசா பற்றிக் கூறவும்? | Kalvimalar - News

அமெரிக்கக் கல்விக்குத் தரப்படும் எப்1, ஜே1 விசா பற்றிக் கூறவும்?அக்டோபர் 24,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

எப்1 எனப்படுவது முழு நேரப் படிப்புக்காகத் தரப்படும் விசா. அந்த முழு நேரப் படிப்பின் கால அளவு வரை இந்த விசா தரப்படுகிறது. இதை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்புச் செய்து பெற முடியும். மேலும் சிறப்புப் பயிற்சி எதுவும் கிடைக்கும் பட்சத்தில் அந்த கால கட்டத்திற்கும் இதை நீட்டிப்புச் செய்து பெற முடியும்.

ஜே1 என்பது எக்சேஞ் விசிட்டர் விசா எனப்படுகிறது. பள்ளிகள், வாணிபம் மற்றும் பிற எக்சேஞ்திட்டங்கள் மூலமாக அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்காக இது தரப்படுகிறது. இது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தரப்படுகிறது. இதை நீட்டிப்புச் செய்து பெற முடியாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us