எனது பெயர் குமரகுரு. அனிமேஷன் பிலிம் மேக்கிங் துறையில் ஈடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். என்.ஐ.டி தேர்வையும் எழுதினேன், ஆனால் தேர்ச்சி பெறவில்லை. எனவே, வேறு எந்த கல்லூரிகளில் நான் விண்ணப்பிக்கலாம்? நான் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளேன்.
செப்டம்பர் 13,2012,00:00 IST
இத்துறையைப் பொறுத்தவரை, என்னதான் தொழில்நுட்பங்கள் இருந்தாலும், ஒருவரின் வரையும் திறன் மற்றும் சொந்த படைப்பாக்க ஆற்றல்களே அவரை சிறப்பிக்க செய்யும். பல தனியார் டிசைன் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல பயிற்சி நிறுவனங்கள் இந்த படிப்பை வழங்குகின்றன. MAAC மற்றும் Anibrain XDI போன்றவை அவற்றுள் சில.