எனது பெயர் கலைவேந்தன். திரைப்பட இயக்குநர் ஆகவேண்டுமென்பது எனது ஆசை. 12ம் வகுப்பை முடித்தப் பின்பாக, விசுவல் கம்யூனிகேஷன் படித்து, அதன்பின், மீடியாவில் சிலகாலம் பணிபுரிந்து, பின்னர் சினிமாவில் நுழையலாம் என்றிருக்கிறேன். ஆனால், எனது பெற்றோரோ, நான் பொறியியல் படிக்க வேண்டுமென விரும்புகின்றனர். அவர்களுக்கு வேறு எந்த துறையின் மீதும் ஆர்வமில்லை. | Kalvimalar - News

எனது பெயர் கலைவேந்தன். திரைப்பட இயக்குநர் ஆகவேண்டுமென்பது எனது ஆசை. 12ம் வகுப்பை முடித்தப் பின்பாக, விசுவல் கம்யூனிகேஷன் படித்து, அதன்பின், மீடியாவில் சிலகாலம் பணிபுரிந்து, பின்னர் சினிமாவில் நுழையலாம் என்றிருக்கிறேன். ஆனால், எனது பெற்றோரோ, நான் பொறியியல் படிக்க வேண்டுமென விரும்புகின்றனர். அவர்களுக்கு வேறு எந்த துறையின் மீதும் ஆர்வமில்லை.செப்டம்பர் 13,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பி.எஸ்சி விசுவல் கம்யூனிகேஷன் என்பது, திரைப்படம் மற்றும் படைப்பாக்க அம்சங்களைப் பற்றி ஓரளவு புரிதலை வழங்கும் ஒரு படிப்பாகும். எனவே, இந்தப் படிப்பானது உங்களுக்கு நன்மை பயக்கும். இப்படிப்பை மேற்கொள்ள, சென்னை லயோலா கல்லூரி மற்றும் பெங்களூர் செயின்ட் ஜோசப் கல்லூரி ஆகியவை புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் சேர விரும்பினால், சம்பந்தப்பட்ட இணையதளத்தை சென்று பார்த்து, விபரங்களை அறிந்துகொள்ள வேண்டும். அதேசமயம், என்னதான் நல்ல கல்லூரியில் படித்தாலும், சினிமாத் துறையைப் பொறுத்தமட்டில், ஒருவரின் உள்ளார்ந்த படைப்புத்திறனே முதன்மையானது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us