புகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் | Kalvimalar - News

புகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்பிப்ரவரி 14,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவின் மறைந்த பிரபல தொழிலதிபர் ஜே.என்.டாடாவின் எண்ணத்தில் உதித்ததுதான் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் எனப்படும் ஐஐஎஸ்சி. கடந்த 1896ம் ஆண்டே இந்நிறுவனத்தை துவங்குவதற்கான அடிப்படைகள் உருவாகிவிட்டாலும், முழுமையாக செயல்படுவதற்குரிய அரசின் சட்டம் 1909ம் ஆண்டுதான் வெளியானது. ஆனால், 1904ம் ஆண்டே, ஜே.என்.டாடா இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு - தனியார் பங்களிப்பின் வெற்றிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த ஐஐஎஸ்சி திகழ்கிறது. இன்றைய நிலையில், இக்கல்வி நிறுவனம், ஒரு சிறந்த அரசுத்துறை, நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

பெங்களூரின் ஒரு முக்கிய இடத்தில், 400 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கல்வி நிறுவனம்அமைந்துள்ளது. இந்த நிலமானது, கடந்த 1907ம் ஆண்டு, மைசூர் மகாராஜாவால் நன்கொடையாக அளிக்கப்பட்டதாகும். பெங்களூருக்கு சுற்றுலா செல்பவர்கள் பார்க்க விரும்பும் முக்கிய இடங்களில் ஒன்றாக இந்த IISc -ம் திகழ்கிறது.

துவக்கத்தில், இரண்டே இரண்டு துறைகளுடன்தான் இந்தக் கல்வி நிறுவனம் செயல்படத் துவங்கியது. ஜெனரல் மற்றும் அப்ளைடு கெமிஸ்ட்ரி மற்றும் எலக்ட்ரோ-டெக்னாலஜி போன்றவையே அத்துறைகள். இந்நிறுவனத்தின் முதல் இயக்குநராக மோரிஸ் W டிராவர்ஸ் இருந்தார். இன்றைக்கு, கம்பீரமாகவும், அழகாகவும் உயர்ந்து நிற்கும் கட்டடத்தை அவர்தான் கட்டத் தொடங்கினார்.

ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோகெமிஸ்ட்ரி போன்றவை, இக்கல்வி நிறுவனத்தில் தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வித் துறைகளாகும். கடந்த 1933ம் ஆண்டு இயற்பியல் துறை உருவாக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்த முதல் இந்தியர் சர்.சி.வி.ராமன்.

முக்கிய நிர்வாகப் பதவிகள்

VISITOR
PRESIDENT OF THE COURT
CHAIRMAN OF THE COUNCIL
DIRECTOR
ASSOCIATE DIRECTOR

போன்றவை, இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகப் பதவிகள். இதில், விசிட்டர் பதவியில், நாட்டின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இருக்கிறார். கோர்ட் பிரசிடென்ட் பதவியில் ரத்தன் டாடாவும், கவுன்சில் சேர்மன் பதவியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கனும் இருக்கிறார்கள்.

சிறப்பான நூலகம்

இக்கல்வி நிறுவன நூலகமானது, கடந்த 1911ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. நாட்டின், சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூலகமாக இந்த நூலகம் திகழ்கிறது. மேலும், முக்கிய நூலகம் தவிர்த்து, ஒவ்வொரு துறைக்கும் தனி நூலகங்கள் இருக்கின்றன.

கடந்த 1995ம் ஆண்டு, இக்கல்வி நிறுவன நூலகமானது ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு நூலகம் என்று பெயர் மாற்றப்பட்டது. உயர்நிலை கணிதத்திற்கான தேசிய வாரியம், இந்த நூலகத்தை, தென் மண்டலத்தில், கணிதத்திற்கான ஒரு பிராந்திய மையமாக அங்கீகரித்துள்ளது.

இக்கல்வி நிறுவனத்திலுள்ள துறைகள்

* பயாலஜிகல் சயின்சஸ் என்ற பிரிவில், மொத்தம் 7 துறைகள் உள்ளன.

* கெமிக்கல் சயின்சஸ் என்ற பிரிவில், மொத்தம் 5 துறைகள் உள்ளன.

* எலக்ட்ரிகல் சயின்சஸ் என்ற பிரிவில், 4 துறைகள் உள்ளன.

* மேதமேடிகல் மற்றும் பிசிகல் சயின்சஸ் என்ற பிரிவில், மொத்தம் 8 துறைகள் உள்ளன.

* மெக்கானிக்கல் சயின்சஸ் என்ற பிரிவில், மொத்தம் 10 துறைகள் உள்ளன.

* இவைத்தவிர, இயக்குநரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ், இயங்கக்கூடிய 11 மையங்கள் உள்ளன.

இவை அனைத்தையும் பற்றி விரிவாக அறிந்துகொள்ள http://www.iisc.ernet.in/academics/departments.php என்ற வலைத்தளம் செல்க.

வழங்கப்படும் படிப்புகள்

அறிவியல் படிப்புகள்

உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், மெட்டீரியல்ஸ், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய பிரிவுகளில், பி.எஸ்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மானுடவியல் படிப்புகள்

இளநிலை அளவில், மானுடவியல் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இலக்கியம், இசை, விசூவல் ஆர்ட்ஸ் மற்றும் தியேட்டர் உள்ளிட்ட பல அம்சங்கள் இப்படிப்பில் இடம்பெறுகின்றன.

இளநிலைப் படிப்புகளைப் பற்றிய விரிவான தகவல்களுக்கு http://www.iisc.ernet.in/ug/ என்ற வலைத்தளம் செல்க.

கோர்ஸ் ப்ரோகிராம்கள்

இக்கல்வி நிறுவனத்தில், எம்.இ., எம்.டெக்., மற்றும் எம்.டெஸ்., மற்றும் மேலாண்மை போன்ற படிப்புகள், கோர்ஸ் ப்ரோகிராம் என்ற வகையின்கீழ் வழங்கப்படுகின்றன.

ஆராய்ச்சிப் படிப்புகள்

Ph.D
Integrated Ph.D
M.Sc (Engg.)
External Registration Program

போன்றவை வழங்கப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை

இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, பல விதிமுறைகள் மற்றும் தகுதி நிலைகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள, http://www.iisc.ernet.in/academics/departments.php and http://www.iisc.ernet.in/students-corner/adv2013.htm என்ற வலைத்தளங்கள் செல்லவும்.

மற்றபடி, இந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அனைத்து அம்சங்கள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள http://www.iisc.ernet.in/index.php என்ற இணையதளம் பயனளிக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us