நான் ஏற்கனவே அமிட்டி குளோபல் பிசினஸ் பள்ளியில் சேர்க்கைப் பெற்றுள்ளேன். அவர்கள், பிஜிபிஎம் மற்றும் எம்பிஏ போன்ற படிப்புகளை நெகிழ்வுத் தன்மையுடன் வழங்குகிறார்கள். இதன் பொருள் என்ன? மற்றும் இந்தப் பட்டங்களுக்கு மதிப்பு உண்டா? இதன்மூலம் நான் அரசு துறைகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா?செப்டம்பர் 13,2012,00:00 IST
அமிட்டி வழங்கும் இரண்டு விதமான படிப்புகளில், பிஜிபிஎம் என்பது முழுநேர டிப்ளமோ படிப்பு மற்றும் எம்பிஏ என்பது தொலைநிலைப் பட்டப் படிப்பு. டிஇசி அனுமதியை அமிட்டி பெற்றிருந்தால், அந்தப் பட்டப் படிப்பு மதிப்பானது என்பதில் சந்தேகமில்லை.