எனது பெயர் கண்ணன். நான் டெல்லி பல்கலைக்கழகத்தில், பி.ஏ(ஹானர்ஸ்) புவியியல் படிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறேன். எதிர்காலத்தில் சிறந்த தொழிலில் நிலைகொள்ள, எதை தேர்வுசெய்வது என்ற குழப்பம் தற்போது என்னை வாட்டுகிறது. இன்னும் 2 வருடங்கள் செலவிட்டு, அதன்பிறகே பணிபுரிய நான் விரும்புகிறேன். எம்.ஏ - சோஷியல் ஒர்க், எம்.ஏ - பேரிடர் மேலாண்மை, டெரி பல்கலையில், வள மேலாண்மையுடன் கூடிய சுற்றுப்புற அறிவியல் ஆகிய படிப்புகளில் எதை தேர்வுசெய்வது என்று புரியாமல் தவிக்கிறேன். திருப்தியான சம்பளம் பெற வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே தகுந்த ஆலோசனை கூறவும். | Kalvimalar - News

எனது பெயர் கண்ணன். நான் டெல்லி பல்கலைக்கழகத்தில், பி.ஏ(ஹானர்ஸ்) புவியியல் படிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறேன். எதிர்காலத்தில் சிறந்த தொழிலில் நிலைகொள்ள, எதை தேர்வுசெய்வது என்ற குழப்பம் தற்போது என்னை வாட்டுகிறது. இன்னும் 2 வருடங்கள் செலவிட்டு, அதன்பிறகே பணிபுரிய நான் விரும்புகிறேன். எம்.ஏ - சோஷியல் ஒர்க், எம்.ஏ - பேரிடர் மேலாண்மை, டெரி பல்கலையில், வள மேலாண்மையுடன் கூடிய சுற்றுப்புற அறிவியல் ஆகிய படிப்புகளில் எதை தேர்வுசெய்வது என்று புரியாமல் தவிக்கிறேன். திருப்தியான சம்பளம் பெற வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே தகுந்த ஆலோசனை கூறவும்.ஜூலை 08,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

Funding மற்றும் ஆராய்ச்சித் துறை சார்ந்த Funding அமைப்புகளை உள்ளடக்கிய பணிகளில் சம்பளம் அதிகம். சர்வதேச என்ஜிஓ -க்கள் இதற்கு நல்ல உதாரணம். இந்த Funding மற்றும் Research Funding பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். CIDA மற்றும் USAID போன்ற ஏஜென்சிகள், திட்டங்களுக்கான நிதியை வழங்குகின்றன. அதேசமயத்தில், IDRC போன்ற ஏஜென்சிகள், Funding செய்வதோடு, பல ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன.

இந்த இரண்டு அமைப்புகளிலுமே, நல்ல சம்பளம் உண்டு. வளாக வேலை வாய்ப்புகளைக் கொண்ட இவற்றை, நீங்கள் கல்லூரி நாட்களிலிருந்தே மேற்கொண்டால், உங்களுக்கு அதிக நன்மைகள் உண்டு.

இவை இல்லையெனில், MCA உங்களுக்கு ஏற்றது. ஏனெனில், இதன்மூலம் அதிகளவிலான ஐடி நிறுவனங்களால் நடத்தப்படும் தேர்வுகளை நீங்கள் எழுதி, சிறந்த பணிவாய்ப்புகளைப் பெற முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us