என் பெயர் மதிவதனி. எனது பொறியியல் இளநிலைப் படிப்பை அடுத்தாண்டு முடித்தபிறகு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவின் எந்தப் பல்கலைக்கழகம், இந்தப் படிப்பை வழங்குகிறது என்பதைத் தெரிவிக்கவும். | Kalvimalar - News

என் பெயர் மதிவதனி. எனது பொறியியல் இளநிலைப் படிப்பை அடுத்தாண்டு முடித்தபிறகு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவின் எந்தப் பல்கலைக்கழகம், இந்தப் படிப்பை வழங்குகிறது என்பதைத் தெரிவிக்கவும்.மே 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

நிதி, கணிதம், பொருளாதாரம், புள்ளியியல், சந்தைப்படுத்தல் மற்றும் இடர்பாடு மேலாண்மை உள்ளிட்ட பல துறைகளில், ஒருவருக்கு திறன்களை வழங்கும் பொருட்டு, பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள், கணித பகுப்பாய்வு, புள்ளியியல் மற்றும் சாத்தியக்கூறு தியரி ஆகியவைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில், அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப் படிப்புகளை முடித்தவர்கள், முதுநிலை பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

UCLA, New york university, Georgia tech, Columbia and UC Berkeley போன்றவை, அமெரிக்காவில், பைனான்சியல் இன்ஜினியரிங் படிப்பதற்கான பிரதான கல்வி நிறுவனங்கள். மேற்கூறிய ஒவ்வொரு கல்வி நிறுவனமும், மாணவர் சேர்க்கை முறையில் தனித்தனி நடைமுறைகளைக் கொண்டிருந்தாலும், அனைத்துமே, இளநிலைப் படிப்பில் ஒருவர் துறை சார்ந்த அதிக அம்சங்களை படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us