எனது பெயர் பிரபாகரன். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் நான். எனவே, கடல் பயணத்திற்கு முந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல் வேண்டும். | Kalvimalar - News

எனது பெயர் பிரபாகரன். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் நான். எனவே, கடல் பயணத்திற்கு முந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல் வேண்டும்.மே 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பல கப்பல் நிறுவனங்கள், 1 வருட கடல் பயண தயாராதல் பயிற்சிகளை வழங்குகின்றன. கோவாவிலுள்ள Institute of maritime studies, Barber ship management(www.imsgoa.org), Garden reach shipbuilders and engineering(GRSE), Kolkatta(www.grec.nic.in) மற்றும் Great eastern shipping co ltd, Mumbai(www.greatship.com) போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. மும்பையிலுள்ள The Shipping Corporation of India, பயிற்சிபெறும் மரைன் இன்ஜினியர்களை பணியில் அமர்த்துகிறது.

ஒரு பொதுவான விதிமுறை என்னவெனில், இத்தகைய பயிற்சிகளில் சேர்பவர்களுக்கு, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தேதியின்படி, 24 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. கண்ணாடி(- or + 2.5) அணிந்திருந்தாலும், நிறக்குருடு குறைபாடு அற்றவராக இருத்தல் வேண்டும். இத்தகையப் பயிற்சிகள், உங்களுக்கு, இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பபுகளை வழங்குகின்றன. இதுதொடர்பான, இன்னும் அதிகமான தகவல்களுக்கு www.dgshipping.com என்ற வலைதளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us