நான் செந்தமிழ் செல்வன். பள்ளி மேல்நிலைப் படிப்பை(வணிகவியல் பிரிவு) முடிக்கவுள்ளேன். கல்லூரிப் படிப்பில், பி.ஏ.எப், பி.பி.ஐ, பி.பி.ஏ மற்றும் பி.எம்.எஸ் ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம் என்ற குழப்பம் உள்ளது. எந்தப் படிப்பிற்கு வேலைவாய்ப்பு அதிகம்? | Kalvimalar - News

நான் செந்தமிழ் செல்வன். பள்ளி மேல்நிலைப் படிப்பை(வணிகவியல் பிரிவு) முடிக்கவுள்ளேன். கல்லூரிப் படிப்பில், பி.ஏ.எப், பி.பி.ஐ, பி.பி.ஏ மற்றும் பி.எம்.எஸ் ஆகிய படிப்புகளில் எதில் சேரலாம் என்ற குழப்பம் உள்ளது. எந்தப் படிப்பிற்கு வேலைவாய்ப்பு அதிகம்?மே 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

மேற்கூறிய அனைத்துப் படிப்புகளுமே, 3 வருட பட்டப் படிப்புகள்தான். அந்தப் படிப்புகள், உங்களுக்கு, கார்பரேட் நிறுவனங்களில், ஜுனியர் எக்சிகியூடிவ் மற்றும் மேலாண்மை நிலையிலான பணிகளை வழங்கினாலும், அவை தொழில்முறை படிப்புகள் என்ற வகைப்பாட்டிற்குள் வராது.

இந்த நான்கில் உங்களுக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுத்து, ஒரு பெயர்பெற்ற கல்லூரியில் சேரவும். மும்பையின் பல வணிக கல்லூரிகள், BAF(bachelor of accounts and finance), BBI(bachelor in banking and insurance) மற்றும் BMS(bachelor in management studies) போன்ற படிப்புகளை வழங்குகின்றன. NMIMS பல்கலைக்கழகம், BBA படிப்பை வழங்குகிறது.

அதேசமயம், நீங்கள் எதிர்காலத்தில், CA(chartered accountancy), CWA(cost works accountancy) மற்றும் CS(company secretaryship) போன்ற படிப்புகளை மேற்கொள்ள விரும்பினால், யோசிக்காமல் B.Com படிப்பில் சேர்ந்து விடவும். ஏனெனில், வேறு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை படித்தால், மேற்கூறிய படிப்புகளை மேற்கொள்ள முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us