சைகாலஜி எனப்படும் உளவியல் துறை தற்போதைய வாழ்வியல் சூழலில் மிக தேவைப்படும் துறைகளுல் ஒன்று. அடிப்படையில் நல்ல சுய நம்பிக்கை, மற்றவர்களை கவனித்து புரிந்து கொள்ளும் ஆர்வம், பொறுமை, பேச்சுத் திறன், பகுத்தாராய்ந்து முடிவெடுக்கும் திறன் போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் இந்த படிப்பு முடிக்கும் போது மிகவும் உதவியாக இருக்கும்.
பட்டப்படிப்புடன் இதை நிறுத்தாமல் பட்ட மேற்படிப்பு மேற்கொள்பவருக்கே வாய்ப்புகள் அதிகம். தவிர வெறும் தகுதிக்காக என்று இல்லாமல் பாடத்தை நன்றாக புரிந்து படிப்பதும் ஆய்வு மனப்பாங்குடன் அலசுவதும் மிக முக்கியம். உங்களுக்கான வாய்ப்புகள் பின்வரும் இடங்களில் உள்ளன.
பள்ளிகள், மருத்துவமனைகள், சமூக சேவை நிறுவனங்கள், மனநல மையங்கள், சிறப்புக் கல்வி மையங்கள், தொழிற்கூடங்கள், வணிகத்துறை, அரசு மற்றும் தனியார் வேலை மையங்கள்.