எனது பெயர் ஆறுமுகம். நான் இ.சி.இ -ல் பி.சி.ஏ படிப்பு முடித்தப்பிறகு, பி.டெக் படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேரலாம் என்றிருக்கிறேன். எனவே, இதுதொடர்பான தகவலை எனக்கு வழங்கவும். | Kalvimalar - News

எனது பெயர் ஆறுமுகம். நான் இ.சி.இ -ல் பி.சி.ஏ படிப்பு முடித்தப்பிறகு, பி.டெக் படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேரலாம் என்றிருக்கிறேன். எனவே, இதுதொடர்பான தகவலை எனக்கு வழங்கவும்.மார்ச் 15,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

BCA -க்குப் பிறகான B.Tech படிப்பை, இந்தியாவில், சில பல்கலைகளே வழங்குகின்றன. BCA அல்லது B.Sc முடித்தப்பிறகு, B.Tech படிப்பதற்கான ஒரு மிகச் சிறந்த இடம் சென்னை அண்ணாப் பல்கலைக்கழகம். Madras Institute of Technology, 2 வருட B.Tech படிப்பை வழங்குகிறது. ஆனால், இப்படிப்புகளில் சேர வேண்டுமெனில், உங்களின் இளநிலைப் படிப்பை 50%க்கும் மேற்பட்ட மதிப்பெண்களுடன் முடித்து, நுழைவுத் தேர்வையும் எழுத வேண்டும்.

அதேசமயம், ஐடி மற்றும் தகவல்தொடர்புத் துறையில் நீங்கள் நுழைய விரும்பினால், MCA படிப்பு சிறந்தது. ஆனால், எந்தப் படிப்பில் சேர்ந்தாலும், சிறந்த மற்றும் பிரபலமான கல்வி நிறுவனத்தில் சேர்ந்தால்தான், சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற முடியும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us