எனது பெயர் நீலமேகம். இ.எம்.பி.ஏ அல்லது வழக்கமான எம்.பி.ஏ ஆகிய 2 படிப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது? | Kalvimalar - News

எனது பெயர் நீலமேகம். இ.எம்.பி.ஏ அல்லது வழக்கமான எம்.பி.ஏ ஆகிய 2 படிப்புகளில் எதைத் தேர்ந்தெடுப்பது?மார்ச் 15,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்த இரண்டுமே வெவ்வேறான படிப்புகள். EMBA படிப்பு என்பது, 5 முதல் 6 வருடங்கள், அலுவலகப் பணி அனுபவமுள்ள நபர்கள், மேலும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவதற்கு தேவைப்படும் படிப்பு. எனவே, இப்படிப்பானது, பொதுவாக ஒரு வருட படிப்பாக, மாலை நேர வகுப்புகள் அல்லது வார இறுதி நாள் வகுப்புகள் அல்லது தொலைநிலைக் கல்வி மூலமாக இப்படிப்பு வழங்கப்படுகிறது.

ஆனால் வழக்கமான MBA படிப்பு என்பது, 2 வருடங்களைக் கொண்டது மற்றும் முழுநேர படிப்பாக வழங்கப்படுகிறது மற்றும் மேலாண்மை தொடர்பான அடிப்படைகளை அதிகம் கொண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த Regular MBA படிப்புதான் அதிகமான மாணவர்களால் விரும்பப்படுகிறது. எனவே, உங்களின் தற்போதைய நிலை என்ன என்பதைப் பொறுத்து, உங்களுக்கு எந்தப் படிப்பு ஒத்துவரும் மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும் என்பதை முடிவுசெய்து கொள்ளுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us