நீங்கள் எப்போது அந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றீர்கள் என்பதைப் பொறுத்தது இது. கடந்த 2002-2006ம் ஆண்டுகளுக்கிடையில், IME வழங்கும் படிப்புகளின் அங்கீகாரத்தை இந்திய அரசு ரத்து செய்திருந்தது. ஆனால் 2006ம் ஆண்டு திரும்பவும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே, நீங்கள் 2006ம் ஆண்டிற்குப் பிறகு தேர்ச்சி பெற்றிருந்தால், நீங்கள் அனைத்துவித அரசுப் பணிகளுக்கும், PSU பணிகளுக்கும் தகுதியுடையவர் ஆகிறீர்கள். மேலும், நீங்கள் உயர் கல்வியும் மேற்கொள்ளலாம். ஆனால், நீங்கள் சேரும் பல்கலையானது, உங்களின் கல்வித் தகுதியை அங்கீகரிக்கிறதா? என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
யு.ஜி.சி. அங்கீகாரம் பெற்ற பி.இ/பி.டெக் படிப்புகளை போலன்றி, அசோசியேட் தேர்வுகள் என்பவை, தொழில்துறை சான்றிதழ்களுக்கானவை. எனவே, உயர்கல்விக்கான தகுதி என்பது, அந்தந்த தனிப்பட்ட பல்கலைக்கழகம் எடுக்கும் முடிவைப் பொறுத்தது.