எனது பெயர் ரமா. நான் இறுதியாண்டு இஇஇ படிக்கிறேன். எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக பணிபுரிய எனக்கு விருப்பம். இதுபோன்ற துறைகள் பெண்களுக்கு எந்தளவில் ஒத்துப்போகும் என்று எனக்கு கூறுங்கள். | Kalvimalar - News

எனது பெயர் ரமா. நான் இறுதியாண்டு இஇஇ படிக்கிறேன். எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக பணிபுரிய எனக்கு விருப்பம். இதுபோன்ற துறைகள் பெண்களுக்கு எந்தளவில் ஒத்துப்போகும் என்று எனக்கு கூறுங்கள்.பிப்ரவரி 26,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

குறிப்பிட்ட துறைகள்தான் என்றில்லாமல், சவால்கள் எல்லாவற்றிலும் உள்ளன. நிறுவனங்கள், பொதுவாக பெண்களைப் பணிக்கு எடுக்க விரும்புவதில்லை என்ற ஒரு தவறான கருத்து நிலவுகிறது. அந்த நிலை கடந்த 60களில் மற்றும் 70களில் இருந்திருக்கலாம். (திருமதி.சுதா மூர்த்தியை, டாடா மோட்டார்ஸ் பணிக்கு எடுக்காமல் நிராகரித்த சம்பவத்தை அதற்கு உதாரணமாக கூறலாம்). ஆனால் இன்றோ நிலைமை வேறு. ஒருவரின் பாலினம் என்ன என்பதற்கு நிறுவனங்கள் பெரியளவில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தொழில்நுட்ப பணிகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையை பல நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

Heavy Industries போன்றவையே, ஒரு குறிப்பிட்ட பணியை, பல கடினமான சூழல்களையும் கடந்து ஒரு பணியாளரால் செய்ய முடியுமா? என்பதை மட்டுமே பார்க்கின்றன, பாலின வேறுபாட்டை அல்ல. அந்த வகையில், எலக்ட்ரானிக்ஸ் துறை ஒரு விஷயமே அல்ல. நீங்கள் தாராளமாக முன்னேறலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us