ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில், எம்.பார்ம் பட்டம் என்பது அத்தொழிலுக்கான ஒரு உயர்நிலைப் பட்டமாக கருதப்படுவதில்லை. அதேசமயம், இந்தப் படிப்பானது, பி.பார்ம் என்ற பட்டத்தின் தேவையை இல்லாமல் ஆக்கிவிட்டது. ஏனெனில், முன்பெல்லாம் பார்மசிஸ்ட் பணியை மேற்கொள்ள பி.பார்ம் என்ற படிப்பு அவசியமாக இருந்தது. அதேசமயம், இந்த எம்.பார்ம் படிப்பானது, பி.பார்ம் படிப்பிற்கடுத்த முதுநிலைப் பட்டம் என்று நினைக்க வேண்டாம்.
கடந்த 2008ம் ஆண்டிலிருந்து, இந்த எம்.பார்ம் படிப்பானது, பயோமெடிக்கல் சயின்ஸ், ஹெல்த் சயின்ஸ், பிசியாலஜி, பார்மகாலஜி, பயோடெக்னாலஜி அல்லது மெடிக்கல் லெபாரட்டரி சயின்ஸ் படிப்புடன் துணை நிலை அறிவியல் போன்ற படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கு திறந்துவிடப்பட்டது.
எம்.பார்ம் படிப்பில் சேர, இளநிலைப் படிப்புடன், ஐ.இ.எல்.டி.எஸ் நிலையில், நல்ல ஆங்கிலப் புலமையையும் பெற்றிருக்க வேண்டும். மேலும், பலவிதமான லைப்/பயாலஜிகல் சயின்ஸ் பாடங்களில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு, இந்தத் துறையில் நுழையும் வாய்ப்பையும் வழங்குகிறது.