என் பெயர் கிருஷ்ணன். நான் உத்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம். முடித்துள்ளேன். கேரளாவிலுள்ள மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான டி.சி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறேன். இந்தக் கல்லூரியானது பி.ஜி.டி.எம் மற்றும் எம்பிஏ படிப்புகளை வழங்குகிறது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தால் எனக்கு நல்லது? | Kalvimalar - News

என் பெயர் கிருஷ்ணன். நான் உத்கல் பல்கலைக்கழகத்தில் பி.காம். முடித்துள்ளேன். கேரளாவிலுள்ள மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கான டி.சி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறேன். இந்தக் கல்லூரியானது பி.ஜி.டி.எம் மற்றும் எம்பிஏ படிப்புகளை வழங்குகிறது. இரண்டில் எதைத் தேர்ந்தெடுத்தால் எனக்கு நல்லது?பிப்ரவரி 26,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

AICTE விதிகளின் படி, எந்தப் பல்கலைக்கழகத்திலும்(சுயாட்சி கல்வி நிறுவனம்) இணைக்கப்படாத, 2 வருட முழுநேர பொது மேலாண்மைப் படிப்புகள், மேலாண்மைப் படிப்பின் முதுநிலை டிப்ளமோ(PGDM) என்றுதான் வகைப்படுத்தப்படும்.

பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் 2 வருட முழுநேர மேலாண்மைப் படிப்புதான் MBA எனப்படும். IIM -கள் வழங்கும் மேலாண்மைப் படிப்புகள் கூட, PGPM என்றுதான் அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், IIM என்பவை பல்கலைகளோ அல்லது பல்கலைகளுடன் இணைக்கப்பட்டவையோ அல்ல.

அதேசமயம், வெறும் பெயர்களை வைத்து கல்வியின் தரத்தையும், மதிப்பையும் கணக்கிட முடியாது. நீங்கள் மேலாண்மைத் துறையில், எதிர்காலத்தில் பிஎச்.டி ஆய்வை மேற்கொள்ள விரும்பினால், எம்பிஏ பட்டப் படிப்பைத்தான் மேற்கொள்ள வேண்டும்.

அதேசமயம், PGDM படிப்பும், MBA படிப்பிற்கு நிகரானது மற்றும் MBA மூலம் கிடைக்கும் அனைத்து நன்மைகளும் இதன்மூலமும் கிடைக்கும் என்றும் இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தால்(Association of Indian Universities) அறிவிக்கப்பட்டுள்ளது.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us