எனது பெயர் பிரபு சந்திரன். நான் ப்ளூயிட் டைனமிக்ஸ் துறையில் பிஎச்.டி மேற்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இத்துறையில் எம்.பில். மற்றும் பிஎச்.டி படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும். இப்படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை நடைமுறைகள் என்னென்ன? | Kalvimalar - News

எனது பெயர் பிரபு சந்திரன். நான் ப்ளூயிட் டைனமிக்ஸ் துறையில் பிஎச்.டி மேற்கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், இத்துறையில் எம்.பில். மற்றும் பிஎச்.டி படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும். இப்படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை நடைமுறைகள் என்னென்ன?பிப்ரவரி 16,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தப் படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகம் இல்லை. சென்னை-ஐஐடி இப்படிப்பை வழங்குகிறது. பிஎச்.டி படிப்பில் சேர, பெயர்பெற்ற பல்கலையில், நல்ல மதிப்பெண்களுடன் எம்.டெக் முடித்திருக்க வேண்டும். மேலும், அண்ணா பல்கலையிலும் பிஎச்.டி படிப்பில் சேரலாம். ப்ளூயிட் டைனமிக்ஸ்(Fluid dynamics) துறையில் எம்.பில் படிப்பானது, ஆந்திராவின், அனந்தப்பூரிலுள்ள எஸ்.கே.யு பல்கலையில் மட்டுமே வழங்கப்படுகிறது.

பிஎச்.டி மற்றும் எம்.பில் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையிலேயே நடைபெறும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us