வெளிநாட்டுப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது சாத்தியமா? | Kalvimalar - News

வெளிநாட்டுப்படிப்பு படிக்க விரும்புகிறேன். இது சாத்தியமா? பிப்ரவரி 01,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பட்டப்படிப்பையே வெளிநாடுகளில் சென்று தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று விரும்பும் பெற்றோர் அதிகம் உள்ளனர். ஆனால் இந்த விருப்பம் நியாயமானது தானா என்பதை அவர்கள் யோசிக்க வேண்டும்.

நமது இந்திய மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க ஆகும் செலவானது நம் நாட்டில் இதே படிப்பை படிப்பதற்கு ஆகும் செலவை விட பல மடங்கு அதிகம். கால அளவும் கூட உள்ளது.

ஒரு பட்டப்படிப்பிற்கே நமது மாணவர்கள் குறைந்தது 70 லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது. இது எவ்வளவு பெரிய விரயம்? கையில் பணமே இல்லாமல் வெளிநாட்டில் நமது மகன் படிக்க வேண்டும் என்று விரும்புவது குடும்பத்தை எங்கே போய் நிறுத்தும் செயல்? உங்களது மகன் எந்த நாட்டில் எதைப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதை யோசியுங்கள்.

இதே படிப்பை நமது நாட்டிலேயே படிக்கும் வாய்ப்புகள் எப்படி உள்ளன என்பதையும் யோசியுங்கள். உதவித் தொகையைப் பெறுவது மிகக் கடினம் என்பதை அறியுங்கள். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது அந்த நாட்டில் கல்வி வாய்ப்பைப் பெறுவது எளிதானது அல்ல என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். தேவையில்லாமல் கனவுகளை வளர்ப்பதை விட சாத்தியங்களை யோசித்து புத்திசாலித்தனமாக முடிவெடுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us