என் பெயர் சோபனா போஸ். எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் பி.டெக். முடித்தப்பிறகு, எந்தவிதமான படிப்புகளை மேற்கொள்ளலாம். இந்தியாவில், அதற்கென இருக்கும் பொருத்தமான கல்லூரிகளைப் பற்றி கூறவும். மேலும், பெர்ப்யூம்(வாசனைத் திரவம்) தொழில்நுட்பம் தொடர்பாக என்னால் எம்.டெக். படிக்க முடியுமா? பெர்ப்யூம் தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. மேற்கொள்ள ஏதேனும் படிப்புகள் உள்ளனவா? அப்படியிருந்தால், அவற்றை மேற்கொள்வதற்கான கல்லூரிகள் பட்டியலை எனக்கு கூறவும். | Kalvimalar - News

என் பெயர் சோபனா போஸ். எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் பி.டெக். முடித்தப்பிறகு, எந்தவிதமான படிப்புகளை மேற்கொள்ளலாம். இந்தியாவில், அதற்கென இருக்கும் பொருத்தமான கல்லூரிகளைப் பற்றி கூறவும். மேலும், பெர்ப்யூம்(வாசனைத் திரவம்) தொழில்நுட்பம் தொடர்பாக என்னால் எம்.டெக். படிக்க முடியுமா? பெர்ப்யூம் தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. மேற்கொள்ள ஏதேனும் படிப்புகள் உள்ளனவா? அப்படியிருந்தால், அவற்றை மேற்கொள்வதற்கான கல்லூரிகள் பட்டியலை எனக்கு கூறவும்.ஜனவரி 10,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பதில்: நீங்கள் கேட்ட துறையில் எம்.டெக். மேற்கொள்ள கெமிக்கல் ரியாக்ஷன் என்ஜினியரிங், கெமிக்கல் பிளாண்ட் டிசைன், கோல் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ், ப்ளூட்(நீர்மம்) டைனமிக்ஸ், பெட்ரோலியம் எக்ஸ்ப்லொரேஷன் அண்ட் ப்ரொடக்ஷன், பாலிமர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், ப்ராசஸ் டைனமிக்ஸ் அண்ட் கண்ட்ரோல்ஸ், டெக்னாலஜி ஆப் வெஜிடபிள் ஆயில்ஸ், பேட்ஸ்(கொழுப்பு) அண்ட் டிடெர்ஜன்ட் போன்ற பலவித பாடங்கள் உள்ளன. அதேசமயம், நீங்கள் மேற்கொள்ளும் எம்.டெக். படிப்பை, மாடர்ன் மெதட்ஸ் ஆப் கெமிக்கல் அனலிசிஸ், மெம்ப்ரேன் செபரேஷன் ப்ராசஸ், டிசைன், சிமுலேஷன் அண்ட் ஆப்டிமைசேஷன், கைனடிக்ஸ் அண்ட் கேடலிசிஸ், சேப்டி அண்ட் ஹசார்டு இன்ஜினியரிங், ப்ளூட்(நீர்மம்) மெக்கானிக்ஸ், டு பேஸ் ப்ளோ, கொலாய்டு அண்ட் சர்பேஸ் சயின்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரியல் பொல்யூஷன் அபேட்மென்ட் போன்ற பிரிவுகளில் சிறப்பு படிப்புகளாக மேற்கொள்ளலாம்.

மேற்கூறிய அனைத்துப் படிப்புகளும், ஐஐடி, என்ஐடி மற்றும் அண்ணாப் பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களிலும், இந்தியாவின் புகழ்பெற்ற பல பொறியியல் கல்லூரிகளிலும் உள்ளன. மேற்கூறிய கல்வி நிறுவனங்களில் இடம்பெற, ஐ.ஐ.டி. நடத்தும் கேட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும்.

இன்ஸ்டிட்யூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தில், பெர்ப்யூம் அண்ட் ப்ளேவர்ஸ் என்ற பிரிவில் நீங்கள் எம்.டெக். படிக்கலாம். அந்தக் கல்வி நிறுவனம், மும்பை பல்கலையின் கீழ் வருகிறது. இது ஒரு இண்டர்டிசிப்ளினரி படிப்பாகும்.

அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பெர்ப்யூம் தொழில்நுட்பத்தில் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us