எனது பெயர் சிவா. கடந்த 1995ம் ஆண்டு டிப்ளமோவில் சிவில் இன்ஜினியரிங் முடித்த நான், ஒரு கட்டடக்கலை நிபுணரிடம் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த அனுபவம் பெற்றவன். தற்போது, கட்டிடக்கலையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எனவே, அதற்கான சாத்தியக்கூறுகளை எனக்கு கூறுங்கள். | Kalvimalar - News

எனது பெயர் சிவா. கடந்த 1995ம் ஆண்டு டிப்ளமோவில் சிவில் இன்ஜினியரிங் முடித்த நான், ஒரு கட்டடக்கலை நிபுணரிடம் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்த அனுபவம் பெற்றவன். தற்போது, கட்டிடக்கலையில் பட்டப்படிப்பு படிக்க விரும்புகிறேன். எனவே, அதற்கான சாத்தியக்கூறுகளை எனக்கு கூறுங்கள்.ஜனவரி 10,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பதில்: பி.ஆர்க் பட்டப் படிப்பில் சேர்வதற்கு, கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு ப்ளஸ்2 முடித்திருப்பதோடு, கட்டடக் கலைக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு(என்..டி.) எழுதியும் தேறியிருக்க வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, கட்டடக்கலை படிப்பில், இரண்டாவது வருடத்திலிருந்து சேரும்(லேட்டரல் என்ட்ரி) வசதி கிடையாது. பிரிட்டனில் சில பல்கலைக்கழகங்கள், டிப்ளமோ படித்தவர்களை தமது கட்டடக்கலை படிப்பில் சேர்த்துக்கொள்கின்றன. உங்களுக்கு பிரிட்டன் செல்லும் வாய்ப்பு இருந்தால், இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்றபடி பார்த்தால், பி.. சிவில் இன்ஜினியரிங் படிப்பில் லேட்டரல் என்ட்ரி முறையில் சேர்க்கைப் பெற்று, அதை முடித்தப்பிறகு, முதுநிலையில், நகர திட்டமிடுதல் உள்ளிட்ட கட்டடக்கலை தொடர்பான படிப்பை தேர்வு செய்யலாம். அதேசமயம், இந்த முறையில் லட்சியத்தை அடைய, நீங்கள் அதிககாலம் காத்திருக்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us