பினிஷிங் ஸ்கூல் என்றால் என்ன? | Kalvimalar - News

பினிஷிங் ஸ்கூல் என்றால் என்ன? ஜூலை 13,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிப் படிப்பை முடிக்கின்றனர். பி.எஸ்சி., பி.காம்., பி.ஏ., பி.பி.ஏ., பி.சி.ஏ., என பல்வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பை முடிக்கும் இவர்கள் அடுத்ததாக பட்ட மேற்படிப்பை மேற்கொள்ள விரும்பலாம். அல்லது வேலை ஒன்றில் சேர விரும்பலாம்.

இவர்கள் சமீப காலமாக செய்திகளில் பார்க்கும் ஒரு வார்த்தை தான் "பினிஷிங் ஸ்கூல்". நீங்கள் படிக்கும் படிப்பு எதுவாக இருந்தாலும் அந்தப் படிப்பை முடிக்கும் இறுதிக் கட்டத்தில் "பினிஷிங் ஸ்கூல்" என்னும் சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றத் தொடங்குகின்றன.

சிறப்பான பர்சனாலிடியை உருவாக்குவது, குரூமிங் என்னும் ஆளுமை மேம்படுத்துதல், மிகச் சிறப்பான நடத்தை முறைகளை பயிற்றுவிப்பது மற்றும் சிறப்பாக ஆடையணியும் ரசனையை உருவாக்குவது என பினிஷிங் ஸ்கூல்கள் சிறப்பாக செயலாற்று கின்றன. இந்த முறையில் பயிற்றுவிக்கப்படும் ஒருவர் பல்லாயிரக்கணக்கான பிற போட்டியாளர்களிடமிருந்து வித்தியாசமாக மேம்பட்டு காணப்படுவார் என்பதால் அவரை பல நிறுவனங்கள் விரும்பி வேலைக்கு எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றன.

நம்மில் பெரும்பாலானோர் "பினிஷிங் ஸ்கூல் "களில் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையுடன் தான் இருக்கிறோம். சேமிப்பின் அவசியத்தை உணரச்செய்வது, முதலீடு பற்றி அறிவது, நமது அடிப்படையான பலவீனங்களை களைந்து பலமாக மாற்றுவது, காலம் மற்றும் நேர மேலாண்மையை அறிவது என கூடுதல் திறன்களையும் நல்லதொரு பினிஷிங் ஸ்கூலானது கற்றுத் தருகிறது.

பட்டப்படிப்பு படிப்பவரும் முடித்திருப்பவரும் பிளஸ் 2 போன்ற படிப்புகளைப் படிப்பவரும் கூட பினிஷிங் ஸ்கூல்களில் சேர்ந்து பயிற்சி  பெறலாம். இதனால் சிறப்பான எதிர்காலத்தை கட்டாயம் பெறலாம். சென்னையில் புளூ லோட்டஸ், குளோபரினா, எல்.பி.எஸ்., அகாடமி, கேரியர் ஜங்சன், கண்டியார் அகாடமி போன்ற பினிஷிங் ஸ்கூல்கள் உள்ளன. கோயம் புத்தூரில் விவேகாஸ் பிசினஸ் மேனேஜ்மென்ட்ஸ், கோல்ஸ் காலிபர், சில்வர் டங், D2-D-எக்ஸைட் போன்ற பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us