கால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க்களிலும் என்ன பணி செய்கின்றனர்? நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி தகவல்கள் தரவும். | Kalvimalar - News

கால் சென்டர்களிலும் பி.பி.ஓ.,க்களிலும் என்ன பணி செய்கின்றனர்? நான் கால் சென்டர் பணிகளுக்குச் செல்ல விரும்புகிறேன். இவற்றுக்கான நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பற்றி தகவல்கள் தரவும். ஜூலை 05,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

வெளிநாடுகளில் உள்ள பாங்குகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஆகியவற்றுக்கு உள்ள வாடிக்கையாளர்கள் தற்போதைய தொழில் நுட்ப யுகத்தில் நேரில் இந்த அலுவலகங்களுக்குச் சென்று தங்களது சேவைகளைப் பெறுவதை விட ஒரு போனிலோ அல்லது எஸ்.எம்.எஸ்., மூலமாகவோ சேவை பெறுவது சுலபமாக உள்ளதால் தகவல்களையும் சேவைகளையும் போன், இன்டர்நெட் போன்றவற்றின் மூலமாகப் பெற விரும்புகின்றனர். இது பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்தும் எதிர்பார்க்கின்றனர்.

இது போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் இந்த மேலை நாடுகளில் உள்ளதால் இந்தச் சேவையை இன்டர்நெட்டிலும் போனிலும் தர விரும்பும் நிறுவனங்கள் இந்தச் சேவைகளில் தங்களது ஊழியர்களை பயிற்சி பெறச் செய்து பணியில் அமர்த்துகின்றனர். இது போன்ற பணிகளை செய்து தருவோருக்கு இந்த நாடுகளில் தரப்படும் சம்பளம் அதிகமாக உள்ளதால் ஆங்கிலமும் குறிப்பிட்ட துறை பற்றிய விபரங்களும் நல்ல கம்ப்யூட்டர் திறனும் உள்ள இந்தியா போன்ற தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்த கால் சென்டர்களை திறந்து இந்தச் சேவையை இது போன்ற நிறுவனங்கள் தந்து வருகின்றன.

சமீபத்திய உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டு முடிந்த மந்தமான சூழலுக்குப் பின்னும் இந்திய ஐ.டி.இ.எஸ்., துறை சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. எனவே இத்துறை சிறப்பான வேலை வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. கால் சென்டர், நிதித் துறைப் பிரிவுகள் மற்றும் அதிக வாடிக்கையாளர்களுடன் பழக வேண்டிய தன்மையுள்ள பணிகளுக்குச் செல்லும் போது மற்றவர்களுடன் பழகும் தன்மை, உங்களது பொறுமை மற்றும் பிறருடன் பணி புரியும் தன்மை ஆகிய குணாதிசயங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. உங்களுக்கு உதவ இதோ சில உதாரணங்கள்....

 • உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது? உங்களது ஆளுமையைப் பற்றி எப்படி விவரிப்பீர்கள்?
 • உங்களது ரெபரன்ஸ் என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபர்களிடம் உங்களைப் பற்றி நாங்கள் கேட்டால் அவர்கள் என்ன கூறுவார்கள்?
 • ரிஸ்க் எடுப்பது உங்களுக்குப் பிடிக்குமா? அப்படி நீங்கள் எடுத்து வெற்றியடைந்த நிகழ்வுகளைப் பற்றிக் கூறவும்.
 • எந்த மாதிரியான சூழலில் பணி புரிவது உங்களுக்குப் பிடிக்கும்?
 • யாருடன் பணி புரிய உங்களுக்குப் பிடிக்காது?
 • எந்த மாதிரியான பொறுப்புகள் உங்களுக்கு செய்யப் பிடிக்காது?
 • உங்களுக்குப் பிடிக்காத பொறுப்புகள் 2 அல்லது 3 கூறவும். இதை எப்படி நீங்கள் சமாளித்து முடிப்பீர்கள்?
 • உங்களை கோபப்படுத்திய சூழ்நிலை ஒன்றைக் கூறவும்.
 • உங்களுடன் பணி புரிபவருடன் உங்களுக்கு ஏற்பட்ட மன வேறுபாடு அல்லது அது போன்ற நிகழ்வு உண்டா? அதை எப்படி சமாளித்தீர்கள்?
 • ஒரு அலுவலகத்தில் மேலதிகாரிக்கும் ஊழியர்களுக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
 • உங்களது பணி புரியும் விதம் எப்படி?
 • அதை உங்களின் கீழ் வேலை பார்ப்பவர் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறீர்கள்?
 • ஒரு அதிகாரியாக உங்களிடம் பணி புரிபவரை கண்டித்த சம்பவம் உண்டா? அதை எப்படி எதிர் கொண்டீர்கள்?
 • இதற்கு முன்னால் பணி புரிந்ததில் எந்த வேலை உங்களுக்குப் பிடித்தது? ஏன்?
 • இதற்கு முன்னால் பணி புரிந்ததில் எந்த வேலை உங்களுக்குப் பிடிக்காதது? ஏன்?
 • நீங்கள் பணி புரியும் நிறுவனத்திற்கு நீங்கள் செய்ய முடிவது என்ன என நினைக்கிறீர்கள்?
 • இதுவரை நீங்கள் வேலை பார்த்ததில் யார் கீழ் பணி புரிந்தது உங்களுக்கு மிகக் கடினமாக இருந்தது?
 • எதனால் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
 • நீங்கள் பணி புரியும் நிறுவனம் உங்களுக்கு என்ன கடமைப்பட்டுள்ளது என நினைக்கிறீர்கள்?
 • எந்த விதமான தகவல்களையும் அள்ளித் தரக்கூடிய இணைய தளங்கள் மூலமாக இவை அனைத்துக்குமான தகவல்களைப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us