சி.பி.ஐ.,யில் பணி புரிய விரும்புகிறேன். பட்டப்படிப்பு படித்து வரும் எனக்கு நம் நாட்டின் இந்த புலனாயவு நிறுவனப் பணி வாய்ப்புகளைப் பற்றிக் கூறலாமா? | Kalvimalar - News

சி.பி.ஐ.,யில் பணி புரிய விரும்புகிறேன். பட்டப்படிப்பு படித்து வரும் எனக்கு நம் நாட்டின் இந்த புலனாயவு நிறுவனப் பணி வாய்ப்புகளைப் பற்றிக் கூறலாமா? ஜூன் 22,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

சி.பி.ஐ., தான் இந்தியாவின் முதன்மையான புலனாய்வு நிறுவனம் என்பதை அறிவீர்கள். இன்டர்போல் எனப்படும் பன்னாட்டு புலனாய்வு நிறுவனத்தின் இந்திய பணிகளை சி.பி.ஐ., தான் மேற்கொள்கிறது. அதாவது பன்னாட்டு குற்றங்களை புரிந்தவரின் இந்திய தொடர்புகள் போன்ற சம்பந்தப்பட்ட தகவல்களைத் திரட்டி குற்றங்களை இந்தியாவில் தடுப்பது சி.பி.ஐ.,தான்.

சி.பி.ஐ., குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் பல திரைப்படங்கள் கூட வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. சி.பி.ஐ., என்றால் மக்கள் மத்தியில் இன்னமும் கூட நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளன. எனவே இதில் பணி புரிய பல இளைஞர்கள் விரும்புவதில் வியப்பில்லை. இதில்

* ஸ்பெஷல் டைரக்டர் (அடிஷனல் டைரக்டர்)

* ஜாயின்ட் டைரக்டர்

* டெபுடி இன்ஸ்பெக்டர் ஆப் போலிஸ்

* டெபுடி சூப்பிரண்டண்ட் ஆப் போலிஸ்

* இன்ஸ்பெக்டர்

* சப் இன்ஸ்பெக்டர்

* அசிஸ்டன்ட் சப் இன்ஸ்பெக்டர்

* ஹெட் கான்ஸ்டபிள்

* கான்ஸ்டபிள் என்ற வரிசையில் பணியிடங்கள் உள்ளன. சி.பி.ஐ.,யில் நுழைய 2 வழிகள் உண்டு.

*இந்தியன் சிவில் சர்விசஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் ஆக இதில் நுழைவது ஒரு வழி. அதாவது தேர்வில் வெற்றி பெற்றால் மத்திய அரசே உங்களை டெபுடேஷன் அடிப்படையில் சிபிஐக்கு அனுப்பலாம். இதை யுபிஎஸ்சி நடத்துகிறது.

*அல்லது சி.பி.ஐ., எப்போது அறிவிக்கிறதோ, அப்போது அந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து சப் இன்ஸ்பெக்டராக இதில் நுழைவது. இந்தத் தேர்வை எஸ் எஸ் சி., நடத்துகிறது. நமது நாளிதழின் இன்றைய வேலை வாய்ப்பு மலரில் சி.பி.ஐ., பணி வாய்ப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. தவறாது பார்க்கவும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us