செல்போன் சர்விஸ் எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

செல்போன் சர்விஸ் எங்கு படிக்கலாம்? ஜூன் 01,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

தற்போதைய சூழலில் அரசு வேலை வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன. எனவே சுய தொழில் பழக நீங்கள் நினைப்பது ஆரோக்கியமானது தான். செல்போன் சர்விஸ் என்பது தற்போது அதிக அளவில் வாய்ப்புகளைத் தரும் துறையாக உள்ளது. டெலிகாம் புரட்சியால் நாடெங்கும் செல்போன் மற்றும் இதர வகை டெலிபோன் சேவைகள் அதிகரித்து வருகின்றன.

எனவே இந்தத் துறையில் பழுது நீக்கும் பணிகளுக்கான வாய்ப்பு அதிகம். இதைப் படிக்க நீங்கள் தேர்வு செய்யும் பயிற்சி நிறுவனமானது ஓரளவு ஏற்கனவே நல்ல பெயர் பெற்றிருப்பதாக இருக்க வேண்டும். மேலும் இதில் தரப்படும் பயிற்சியானது போதிய கால அளவைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

தற்போது எண்ணற்ற நிறுவனங்கள் இந்தப் பயிற்சியை தந்துவந்தாலும், பாலிடெக்னிக் போன்றவற்றில் பயிற்சியில் போதிய கவனம் தரப்படுகிறது. ஆங்கிலம் நன்றாக அறிந்தவர் தான் இதைப் படிக்க முடியும் என்று நம்ப வேண்டாம்.

உங்களது அடிப்படை ஆர்வம் எப்படி இருக்கிறது, எவ்வளவு வேகமாகவும் நுணுக்கமாகவும் இதை கற்றுக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே நீங்கள் இதில் திறன் பெற முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us