பி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா? அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா? எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்? | Kalvimalar - News

பி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா? அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா? எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்? மே 07,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

பி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா? அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா? எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்?

இன்றைய வேலைச் சூழலில் தகுதிகளுக்கு எந்த வேலையும் கிடையாது என்பதை மனதில் கொள்வது மிக முக்கியம். தகுதிகளை விட உங்களது திறன்கள் தான் உங்களுக்கான வெற்றியை தீர்மானிக்கின்றன என்பதை இந்தப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். எனவே பி.சி.ஏ., முடித்துள்ள நீங்கள் அடுத்ததாக எம்.பி.ஏ. அல்லது எம்.சி.ஏ., இரண்டில் எதைப் படிப்பது என்பதை உங்களது அடிப்படை ஆர்வமும் ஈடுபாடும் தான் தீர்மானிக்க வேண்டும்.

டெக்னிகல் துறையில் ஆர்வமுடையவராக இருந்தால் உங்களுக்கு எம்.சி.ஏ., பொருந்தும். மேனேஜ்மென்ட் துறை ஆர்வத்தைத் தூண்டினால் எம்.பி.ஏ., உங்களுக்கான படிப்பு என முடிவு செய்து கொள்ளலாம். உங்களுக்கான ஆர்வம் எதில் என்பதை தீர்மானிக்க ஆன்லைனில் அதை அடையாளம் காண உதவும் இணைய தளம் www.selfdirectedsearch.com. இத் தளத்திற்குச் சென்று உங்களது அடிப்படை குணாதிசயங்களையும் திறனையும் ஆர்வத்தையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us