கோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை என்ன பிரிவுகளில் நடத்துகிறது? | Kalvimalar - News

கோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக் கழகம் தொலை தூர கல்வி முறையில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்புகளை என்ன பிரிவுகளில் நடத்துகிறது? ஏப்ரல் 07,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

ஏர்லைன் மற்றும் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட், பாங்கிங், இன்சூரன்ஸ் மற்றும் பினான்சியல் சர்விசஸ், பயோடெக்னாலஜி, இபிசினஸ், இ கவர்னன்ஸ், எனர்ஜி மேனேஜ்மென்ட், பினான்சியல் மேனேஜ்மென்ட், புட் மற்றும் அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், ஜெனரல் மேனேஜ்மென்ட், ஹெல்த்கேர் மற்றும் ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட், இன்ப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட், இன்டர்நேசனல் பிசினஸ் மேனேஜ்மென்ட், பார்மாசூடிகல் மேனேஜ்மென்ட், போர்ட் மேனேஜ்மென்ட், ரீடெயில் மற்றும் சப்ளை மேனேஜ்மென்ட், சாப்ட்வேர் என்டர்பிரைசஸ் மேனேஜ்மென்ட், டெலிகாம் மேனேஜ்மென்ட், டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட், டூரிசம் மேனேஜ்மென்ட், டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட், வென்சர் கேபிடல் மற்றும் கேபிடல் மார்க்கெட் மேனேஜ்மென்ட் ஆகியவற்றில் எம்.பி.ஏ. படிப்பு தரப்படுகிறது.

கால் சென்டர் மேனேஜ்மென்ட், ஐடி எனேபிள்ட் சர்விசஸ், நெட்வொர்க்கிங் மற்றும் சாப்ட்வேர் குவாலிடி அஸ்யூரன்ஸ் ஆகிய பிரிவுகளில் எம்.சி.ஏ. தரப்படுகிறது. எம்.பி.ஏ. படிப்புக்கு பட்டப்படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர் விண்ணப்பிக்கலாம்.

எம்.சி.ஏ.படிப்புக்கு கணிதம்/புள்ளியியல்/கம்ப்யூட்டர் தொடர்பான பாடங்களை பட்டப்படிப்பில் படித்திருப்பவர் விண்ணப்பிக்கலாம். அல்லது பிளஸ் 2ல் கணிதத்தைப் படித்து ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் பெற ரூ.500க்கான டிடியை அனுப்பிப் பெறலாம். முழு விபரங்கள் பெற இதன் முகவரி
Directorate of Online and Distance Education, Anna University, Coimbatore GCT Campus. PIN 641 013.

விண்ணப்பத்தை டவுண்லோட் செய்து கொண்டு நிரப்பி அனுப்பும்போது டிடியுடன் அனுப்பலாம்.
இன்டர்நெட்: www.annauniv.ac.in
இமெயில்: dode@annauniv.ac.in
தொலைபேசி எண் 04222455353.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us