சுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா? | Kalvimalar - News

சுற்றுலாத் துறையில் படிப்புகளை மேற்கொண்டால் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளனவா? மார்ச் 16,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

சுற்றுலாத் துறை என்பது எப்போதுமே எந்த நாட்டிலும் வளரக் கூடிய துறை என்பதை அறியுங்கள். அந்தந்த நாடு அல்லது மாநிலங்கள் எடுக்கும் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களைப் பொறுத்து இவற்றில் வாய்ப்புகள் அதிகரிப்பதும் குறைவதும் தீர்மானிக்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இத் துறை இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. தனியார் மற்றும் பொதுத் துறை இரண்டிலுமே இதற்கான வாய்ப்புகள் அதிகம். டிராவல் ஏஜென்சிகள், டூர் ஆபரேட்டர், ஏர்லைன்ஸ், ஓட்டல்கள், டிரான்ஸ்போர்ட் மற்றும் கார்கோ நிறுவனங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உருவாகின்றன. குறிப்பாக தனியார் மயமாக்கலின் பின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஏர்லைன்ஸ் துறையில் இதற்கான வாய்ப்புகள் மிக அதிக அளவில் உள்ளன.

ரிசர்வேஷன் மற்றும் கவுண்டர், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங், டூர் பிளானர், டூர் கைடுகள், சுற்றுலாத் துறையில் இயக்குனர் மற்றும் தொடர்பான பணிகள், சுற்றுலாத் துறை அலுவலகங்களில் தகவல் உதவியாளர்கள், விமானத் துறையில் டிராபிக் அசிஸ்டண்ட், பிளைட் பர்சர், வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் போன்ற பணிப் பிரிவுகளை இத் துறையில் காணலாம். ஓட்டல்களில் பிரண்ட் ஆபிஸ் அதிகாரிகள், ஹவுஸ் கீப்பிங் உதவியாளர், பப்ளிக் ரிலேஷன்ஸ், புட் அண்ட் பிவரேஜ் பணிகளையும் பெறலாம். டிரான்ஸ்போர்ட் துறையில் கோச் ஆபரேடர் பணியும் உள்ளது.

வெறும் கல்வித் தகுதியை நம்பியிருப்பது நீங்கள் அடைய விரும்பும் இலக்குகளை கடினமாக்கிவிடும். எனவே கூடுதலாக பின்வரும் திறன்களை பெற முயற்சிக்க வேண்டும். மிகச் சிறப்பான தகவல் தொடர்புத் திறன், சிறப்பான ஆங்கிலம், பிரெஞ்ச் போன்று குறைந்தது 2 அல்லது 3 வெளிநாட்டு மொழிகளில் பேசும் எழுதும் திறன், இந்தியாவின் வரலாறு, கலாசாரம் இவற்றில் மிகச் சிறந்த புலமை, பொதுவாக சிறப்பான பொது அறிவு.

உங்களைப் போலவே பலரும் இதே படிப்பைப் படிப்பதை மனதில் கொண்டு மற்றவரை விட நமக்கு மேலே குறிப்பிட்டுள்ள திறன்கள் எப்படி உள்ளன என்பதை கணக்கிட்டு தொடர்ந்து முன்னேற முயற்சிக்க வேண்டும். மேலும் உங்களது பாடத்தில் மிகச் சிறந்த திறன் பெற்றிருப்பது தான் உங்களுக்கான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us