நேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவ முறை தொடர்பான கல்வி கற்று இதில் பணி புரிய விரும்புகிறேன். இதில் பணி வாய்ப்புகள் எப்படி உள்ளன? | Kalvimalar - News

நேச்சுரோபதி எனப்படும் இயற்கை மருத்துவ முறை தொடர்பான கல்வி கற்று இதில் பணி புரிய விரும்புகிறேன். இதில் பணி வாய்ப்புகள் எப்படி உள்ளன? பிப்ரவரி 15,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

நேச்சுரோபதி என்பது பலராலும் அறியப்படாத, ஆனால் சப்தமே இல்லாமல் முன்னேற்றம் அடைந்து வரும் துறை என்பதில் சந்தேகமில்லை. இதில் உள்ள பணி வாய்ப்புகள் பற்றிக் காண்போம். நேச்சுரோபதி மருத்துவர் இன்று சமூகத்தால் மதிக்கப்படுபவராக பார்க்கப்படுகிறார். இப் படிப்புகளை டிப்ளமோ, பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என பல நிலைகளில் படிப்புகளைப் படிக்கலாம். ஆனால் மிகக் குறைவான கல்வி நிறுவனங்களில் மட்டுமே இப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட நேச்சுரோபதி பட்டப்படிப்பானது 4 ஆண்டு படிப்பாகத் தரப்படுகிறது. நியூட்ரிஷன் தெரபி, அக்குபங்சர், ஓமியோபதி மருந்துகள், இயற்கையான குழந்தை பிறப்பு, தாவர மற்றும் மூலிகை மருந்துகள் போன்றவற்றை இதில் படிக்க வேண்டும். ரெய்கி, ஓமியோபதி, அக்குபங்சர் போன்ற மாற்று மருத்துவ முறைகளை இணைத்து நேச்சுரோபதி சமயங்களில் செயல்படுகிறது.

இம்மருத்துவத்தின் அடிப்படைகளான உடற்பயிற்சி, புகை பிடித்தலை நிறுத்துவது, காய்கனிகளை உட்கொள்ளுவது, திட்டமிட்ட எளிய உணவுப் பழக்கம் ஆகியவை இன்று பல நாடுகளிலும் வரவேற்புடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவில் தனியார் மற்றும் அரசு சுகாதார மையங்களில் நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான பணி வாய்ப்புகள் உருவாகியுள்ளன. நம் நாட்டின் அதிக மக்கள் தொகையை கணக்கில் கொண்டு தனியாக நேச்சுரோபதி மருத்துவர் பயிற்சி செய்வதற்கும் நல்ல சூழல் தற்போது நிலவுகிறது.

நவீன விஞ்ஞான மருத்துவத்தின் பக்க விளைவுகள் பற்றி இன்று எண்ணற்ற மக்களுக்கு விழிப்புணர்வு இருப்பதால் நேச்சுரோபதிக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்றே கூறலாம். நேச்சுரோபதி பணித் துறைகள் இத் துறையின் பணிப் பிரிவுகள் என இவற்றைக் கூறலாம்.

உணவு முறையைப் பொறுத்த சிகிச்சை ஆலோசனை மற்றும் வாழ்க்கை முறை சீரமைப்பு மன அழுத்தத்தைத் குறைக்க உடற்பயிற்சி, ரிலாக்சேஷன் டெக்னிக் மற்றும் உணவின் மூலமாக அட்ரினலின் சுரப்பியை கட்டுப்படுத்துதல் இயற்கை முறைகளின் மூலமாக உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்குவது மூலிகை வைத்திய முறை ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வின் பாடத்திட்டம் பற்றி கூறுங்களேன்.

பிரிட்டிஷ் கவுன்சில், ஐ.டி.பி., ஆஸ்திரேலிய ஐ.இ.எல்.டி.எஸ். மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் பன்னாட்டு தேர்வு இது. ஆங்கிலத்தில் கேட்கும் திறன், படிக்கும் திறன், எழுதும் மற்றும் பேசும் திறன் ஆகியவை இந்தத் தேர்வில் பரிசோதிக்கப்படுகின்றன. 16 வயதுக்கு மேற்பட்டவர் மட்டுமே இத் தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகின்றனர். அமெரிக்காவில் மட்டுமே 540க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இதை ஏற்றுக்கொள்கின்றன.

இது அல்லது டோபல் தேர்ச்சி ஆங்கில மொழி நாடுகளில் படிக்க அவசியம் தேவைப்படுகிறது. முன்பு இந்தத் தேர்வை ஒரு தடவை எழுதி தேர்ச்சி பெறாவிட்டால் குறைந்த பட்ச இடைவெளிக்குப் பின்னரே இதை எழுத முடியும். ஆனால் இப்போது அந்தத் தடை இல்லை. இதற்கான கட்டணமாக சுமார் 7 ஆயிரம் வரை செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு mailto:Helpdesk@IELT SIndia.com இமெயில் முகவரியிலும் விபரங்கள் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us