ஏற்கனவே சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ள நீங்கள் இனி பி.ஆர்க்., படிக்கும் வாய்ப்பு இல்லை. தேவையும் இல்லை. சிவில்
இன்ஜினியரிங்கோடு தொடர்புடைய கேட் எனப்படும் கம்ப்யூட்டர் எய்டட் டிசைனிங் படிப்பது பலன் தரும். மேலும் இன்டீரியர் சைனிங்கில்
ஆர்வமுள்ள நீங்கள் இன்டீரியர் டெக்ரேட்டர், தியேட்டர் செட் டிசைனர், சுற்றுலா கண்காட்சி டிசைனர், விண்டோஸ் டிஸ்பிளே டிசைனர் போன்ற பணிகளிலும் ஈடுபடலாம்.
ஒரு படிப்பை வெறும் படிப்பாக படிப்பதால் மட்டுமே நாம் அதில் திறன் பெற முடியாது. கூடுதலாக இயல்பாகவே நீங்கள் பண்பாட்டு மாற்றங்களை அறிந்திருப்பது, ஓவியத்தில் ஆர்வம் இருப்பது, கற்பனை வளம் மிக்கவராக இருப்பது மற்றும் படமாக வரைவதை உருவமாக மாற்றிக் கொடுக்கும் திறன் பெற்றிருப்பது போன்றவற்றைப் பெற்றிருந்தால் உங்களால் இந்தத் துறையில் மிளிர முடியும். தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில் இன்டீரியர் டிசைனிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் டிசைன், அமைந்தகரை, சென்னை ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு. மேலும் ஆமதாபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் நிறுவனமும் இந்த படிப்பை நடத்துகிறது. மேலும் சென்னையிலுள்ள எக்ஸ்டீரியர்ஸ்இன்டீரியர்ஸ் நிறுவனம் இதில் ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது. இவற்றைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். இன்டர்நெட் இதில் உங்களுக்குப் பெரிதும் உதவும்.