சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி? | Kalvimalar - News

சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பார்வையாளராகக் கலந்து கொண்டேன். திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நல்ல வேலை பெற முடியும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது. திறன்களை வளர்த்துக் கொள்வது எப்படி?பிப்ரவரி 09,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

திறன்களை வளர்ப்பது பற்றி இந்தப் பகுதியில் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே இந்த அம்சம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டு வருகிறது. பட்டப்படிப்பு முடித்தவருக்கு இவை பயன்படும். ஆனால் 10ம் வகுப்பும் பிளஸ் 2வும் முடித்திருப்போருக்கு கூடுதலாக என்ன திறன்கள் பெற முடியும் என நமக்குக் கேள்வி எழுவது இயற்கை தான்.

அடிப்படையில் நமக்கு ஆர்வம் இருக்கும் துறையில் சிறப்பு தொழில் நுட்பப் பயிற்சி பெறுவது இதற்கான சரியான தீர்வாக அமையும். டூ-வீலர் பழுது பார்ப்பதில் சிலருக்கு அடிப்படையிலேயே ஆர்வம் இருக்கும். மொபைல் போன்களை கழற்றிப் பார்த்து சரி செய்யும் ஆர்வம் சிலருக்கு இருக்கும்.

டிசைன் டிசைனான ஆடைகள் வடிவமைப்பில் சிலர் ஆர்வமுள்ளவராக இருப்பர். திருமணப் பத்திரிகை போன்றவற்றை வடிவமைப்பதில் சிலருக்கு ஆர்வம் இருக்கும். இந்தப் பயிற்சியானது அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சியாக அமைந்து அடிப்படையில் நீங்கள் பொது அறிவையும் தகவல் தொடர்புத் திறனையும் பெற்றிருந்தால் உங்களுக்கு உங்களது குறைவான கல்வித் தகுதியைத் தாண்டி சீரான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள உதவும் வேலை கட்டாயம் கிடைக்கும்.

8, 10 மற்றும் பிளஸ் 2 தகுதியோடு இது போன்ற ஒன்றில் அடிப்படையில் ஆர்வமுள்ளவராக இருந்தால் நீங்கள் தேர்வு செய்யக் கூடிய படிப்புகளாக சிலவற்றை கீழே குறிப்பிடுகிறோம். சிலவற்றில் பிளஸ் 2 முடித்திருப்பவர் தான் சேர முடியும். பொதுவாக 18 முதல் 35 வயதுக்குள் இருப்பவர் இதில் சேர முடியும்.

சிறு தொழில்களுக்கான ஈ.டி.பி., ஸ்கிரீன் பிரிண்டிங் பேப்பர் பைகள் தயாரிப்பு புக் பைண்டிங் வீடுகளுக்கான சிறு எலக்ட்ரிக் சாமான்கள் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கம் டிவி ரேடியோ பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் ஏசி ரெப்ரிஜிரேஷன் பராமரிப்பு மொபைல் போன், பேக்ஸ், விசிடி பொருட்கள் சேவை டெய்லரிங் டீசல் இன்ஜின் ஜெனரேட்டர் பழுதுநீக்கம் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு கம்ப்யூட்டர் பழுதுநீக்கம் மற்றும் நெட்வொர்க்கிங் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி டூ-வீலர் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கம்.

இவற்றில் நீங்கள் தேர்வு செய்யும் பிரிவோடு நீங்கள் கட்டாயம் அறிய வேண்டியவை சில இருக்கின்றன. தேர்வு செய்திருக்கும் தொழிலில் உள்ள ரிஸ்குகள், அவற்றை சந்திக்கக் கூடிய உத்திகள், தகவல் தொடர்புத் திறன்கள், மேலாண்மைத் திறன், கடும் போட்டி மற்றும் நெருக்கடியில் செயல்படக்கூடிய தன்மை, நிதி மேலாண்மை, அரசு உதவிகள், வரி கட்டாயங்கள், சுற்றுச் சூழல் மேலாண்மை மற்றம் கிரியேடிவிடி ஆகியவையும் ஒவ்வொரு தொழிலுக்கும் தேவைப்படும் திறனாக அமைகிறது.

எனவே நீங்கள் உங்களது ஆர்வம் மற்றும் அடிப்படைத் திறனுக்கேற்ப ஒரு தொழிலை தேர்வு செய்து திறம்பட அதை முடிப்பதுடன் இந்தத் திறன்களையும் பெற்றால் தான் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியும். எதையும் ஆழமாகவும் தெளிவாகவும் கற்றுக் கொண்டால் தான் நம்மால் இந்த போட்டிகள் நிறைந்த உலகில் வெற்றி பெற முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us