சேவியர் பிசினஸ் நிறுவனத்தின் சாடிலைட் படிப்பு பற்றிக் கூறவும். ஜனவரி 25,2011,00:00 IST
சாடிலைட் படிப்பு என்பது சாடிலைட்கள் பற்றிய படிப்பு அல்ல என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். இந்தியாவில் ஐ.ஐ.எம்கள் போலவே தரமான பிசினஸ் படிப்புகளுக்காக அறியப்படும் சேவியர் குழுமநிறுவனங்கள் எக்ஸ்.எல்.ஆர்.ஐ. என அறியப்படுகின்றன. கடுமையான போட்டியை இதன் படிப்புகள் உள்ளடக்கியுள்ளன. இது நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு சாடிலைட் படிப்புகளை நடத்துகிறது. அதாவது சாடிலைட், பிராட்பேண்ட் போன்றவற்றின் உதவியோடு இதன் பிசினஸ் படிப்புகள் ஏற்கனவே பணியில் இருப்பவருக்காக நடத்தப்படுகின்றன.
பி.ஜி. சர்டிபிகேட் இன் பிசினஸ் மேனேஜ்மென்ட்
பி.ஜி. சர்டிபிகேட் இன் ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட்
பி.ஜி. சர்டிபிகேட் இன் இண்டஸ்ட்ரியல் அண்ட் லேபர் லா மேனேஜ்மென்ட்
பி.ஜி. சர்டிபிகேட் இன் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் ஆகியவை இந்த சாடிலைட் படிப்புகளாகும்.
12 மாத கால அளவைக் கொண்ட இந்தப் படிப்புகளின் பாடங்கள் ரியல் டைம் அளவில் நமக்கு வந்தடைகின்றன. அதாவது இன்டர்நெட் போன்ற தொழில்நுட்ப வழியாக நமக்கு நடத்தப்படுகின்றன. இவற்றை அஞ்சல் வழி படிப்புகளோடு குழப்பிக் கொள்ளக்கூடாது. படிப்பு காலத்தில் ஒரு தடவை நேரடியாக இந்த கல்வி நிறுவனத்தில் 5 முதல் 7 நாட்கள் வரை நேரடி பயிற்சியைப் பெறுவதும் முக்கியம். இது வரை இந்தப் படிப்புகளை 1500 பேருக்கும் மேல் முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு விபரங்களை www.xlriac.in/satellite என்னும் தளத்தில் அறியலாம்.