சைக்கோதெரபி என்பது சிறந்த வாய்ப்பு களைக் கொண்ட துறை தானா? | Kalvimalar - News

சைக்கோதெரபி என்பது சிறந்த வாய்ப்பு களைக் கொண்ட துறை தானா? ஜனவரி 25,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

உளவியலின் முக்கியப் பிரிவுகளில் ஒன்று சைக்கோதெரபி. உளவியல் ரீதியான மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகளைப் பெற்றிருப்பவருக்கு இத் துறை தான் உதவுகிறது. இதன் உதவியோடு இப் பிரச்னைகளைப் பெற்றிருப்பவர் தங்களது மனப்பாங்கையும் சிந்தனைகளையும் மாற்றிக் கொள்ள முடிகிறது.

நடத்தை முறைகளையும் இது மாற்றி ஒருவரை சாதாரணமான நபராக மாற்றவும் இது உதவுகிறது. நமது சிந்திக்கும் முறைகளை சைக்கோதெரபிஸ்டுகள் மாற்றுகிறார்கள். சைக்காலஜி என்னும் உளவியலில் பட்டப்படிப்பை முடித்திருப்பவர் பட்ட மேற்படிப்பில் உளவியலின் இந்த சிறப்புப் பிரிவைப் படிக்கலாம்.

உளவியல் பட்ட மேற்படிப்பு முடித்த பின்னும் இதைப் படிக்கலாம். சைக்கியாட்ரிஸ்டுகள் கட்டாயம் எம்.பி.பி.எஸ். முடித்த டாக்டர்களாக இருக்க வேண்டும். ஆனால் சைக்கோதெரபிஸ்டுகள் உளவியல் படித்தவராக இருந்தால் போதும். இதில் கிளினிகல் சைக்காலஜி, இண்டஸ்ட்ரியல் சைக்காலஜி போன்ற படிப்புப் பிரிவுகள் உள்ளன. இது போக ஆர்ட்ஸ் சைக்கோதெரபி என்னும் பிரிவும் உள்ளது. இது கிராபிக்ஸ் போன்ற வடிவங்களின் ரூபத்தில் பிரச்னைகளை கையாளுவதாகும்.

அடுத்தவர் மேல் பரிவுச் சிந்தனை இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல துறையாக அமையும். இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சைக்கோதெரபிஸ்டுகள் நமக்கு அண்மையில் இருப்பதை பலர் விரும்புகிறார்கள் என்பதை இங்கே கட்டாயம் குறிப்பிட வேண்டும். அவ்வளவு தேவை இருக்கிறது சைக்கோதெரபிஸ்டுகளுக்கு. மும்பை பல்கலைக்கழகம், நிம்ஹான்ஸ் (பெங்களூரு) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இது தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us